பூனைகளுக்கு பரவுகிறது வைரஸ் – உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தால் காப்பாற்றலாம்

0
26
cat news

உலகமே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனாவால் அல்லோலப்பட்டு வருகிறது. மூன்றாவது அலை படுவேகமாக பரவி வருகிறது. மக்களை காப்பாற்ற அரசுகள் போராடி வருகின்றன.மக்களை தனித்திருக்க செய்யும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி நாளை ஊரடங்கு அமல்படுத்தபட இருக்கிறது.

இந்தநிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவலாக வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளுக்கு வைரஸ் தொற்று நோய் பரவி வருகிறது. வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளுக்கு முதலில் காய்ச்சல் வருகிறது. சாப்பிட முடியாமல் திணறுகிறது, வாந்தி எடுக்கிறது, வயிற்றுப்போக்கு வருகிறது. பின்னர் இறந்துவிடுகிறது என்று சொல்கிறார்கள். முதலிலே இதை கவனித்து தடுப்பூசி போட்டுவிட்டால் சரியாகிவிடுகிறதாம். தவறவிட்டால் இறந்துவிடுகிறது என்கிறார்கள்.

இது குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறும்போது, ’இது பழைய நோய்தான். மனிதனுக்கு கொரோனா வைரஸ் நோய் வருவதுபோல் ஒவ்வொரு உயிருக்கும் வைரஸ் நோய் வருவது வழக்கம். அந்த வகையில் நாய் வைரஸுக்கு இணையாக பூனைக்கு இந்த வைரஸ் நோய் வருகிறது. இப்போது தமிழகம் முழுவதும் பூனைகளுக்கு இந்த நோய் வருகிறது.

இதற்கு தொடர்ந்து ஒரு வாரம் தடுப்பூசி போட வேண்டும். அதற்கு பிறகு 20 நாட்கள் போட கூடாது. பூனைகளை தனியாக வைக்க வேண்டும். அடுத்த பூனைகளுடன் எந்தவித தொடர்பும் இருக்க கூடாது. நிறைய பூனைகளுக்கு சிகிச்சை கொடுத்திருக்கிறோம். வீட்டில் உள்ளவர்கள் அலட்சியமாக இருந்து கவனிக்காமல் விட்டுவிட்டால் அது இறந்துவிடும். அந்த வகையில் சமீபத்தில் நிறைய பூனைகள் இறந்திருக்கிறது. சரியான நேரத்தில் சிகிச்சைக்காக கொண்டு வருபவர்களின் பூனைகளை காப்பாற்ற முடியும்’’ என்கிறனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here