தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு கீதாஜீவன் தங்க மோதிரம் வழங்கினார் – ஸ்டாலின் பிறந்தநாள் பரிசு

0
372
thoothukudi dmk geethajeevan news

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 68வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு இன்று காலை, பிறந்தநாள் கேக் வெட்டும் நிகழ்ச்சி, பழைய பேரூந்து நிலையம் அருகில்,தூத்துக்குடி மாநகர தி.மு.க சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ., பிரம்மாண்டமான கேக்கை வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.இது போல் தூத்துக்குடி மாநகரத்திற்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் திமுக கொடியேற்றி, இனிப்பு வழங்கப்பட்டது.

பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கீதாஜீவன் எம்எல்ஏ., தங்க மோதிரங்களை அணிவித்தார். பழைய பேருந்து நிலைய டிப்போ முன்பு தொ.மு.ச. பேரவை சார்பில் திமுக கொடி யேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தொமுச தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.

செயலாளர் மரியதாஸ் வரவேற்புரையாற்றினார். கீதாஜீவன் எம்எல்ஏ., கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இது போல் மதியம் தூத்துக்குடி மாநகரத்திலுள்ள ஜான்ஜீகன் முதியோர் இல்லம், பிரையன்ட் நகர் காது கேளாதோர் பள்ளி, பாசக்கரங்கள், நேசக்கரங்கள், அனாதை இல்லம், லயன்ஸ் டவுண் அனாதை விடுதி உள்ளிட்ட அனைத்து அனாதை இல்லங்களுக்கும் மதியம் அறுசுவை விருந்து வடக்கு மாவட்ட திமுக சார்பில் கீதாஜீவன் எம்எல்ஏ., வழங்கினார் .

இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட மீனவரணி செயலாளர் அந்தோணி ஸ்டாலின், மாவட்ட இளைஞரணி செயலாளர் சிஎன் மதியழகன், இளைஞரணி துணை செயலாளர் பிரதீப், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், திமுக நிர்வாகிகள் கோட்டுராஜா, பாலசுப்பிரமணியன், கதிரேசன், கலைச்செல்வி, ரவீந்திரன், கீதா முருகேசன், முருக இசக்கி அலாவுதீன், தொழிற்சங்கம் சார்பில் கருப்பசாமி, ராமசாமி, வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here