முதியோர், விதவை உதவித்தொகைகளை 60 வயது தாண்டும் நபர்களுக்கும் வழங்க கோரிக்கை

0
145
nazareth news

முதியோர் மற்றும் விதவை உதவித்தொகைகளை 60 வயது தாண்டும் நபர்களுக்கும் வழங்க வேண்டும் என்று பஞ்., தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆழ்வார்திருநகரி யூனியன் பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் குரும்பூரில் நேற்று நடந்தது. கூட்டமைப்பு தலைவர் கச்சனாவிளை பஞ்., தலைவர் கிங்ஸ்டன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் புன்னக்காயல் பஞ், தலைவர் சோபியா முன்னிலை வகித்தார். செயலாளர் குருகாட்டூர் பஞ்., தலைவர் ஜன்னத்புஷ்பராணி வரவேற்றார்.

கூட்டத்தில், புறையூர் பஞ்.,சில் காலியாக செயலர் பணியிடத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபரை பணிநியமனம் செய்ய வேண்டும். பிரச்னைக்குரிய குருகாட்டூர், திருக்களூர், சேதுக்குவாய்த்தான், கடையோடை பஞ்., செயலாளர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். பொன்னன்குறிச்சி கூட்டுகுடிநீர் திட்டம் முறையாக செயல்படுத்தாமல் பல ஊராட்சிகளுக்கு தண்ணீர் சரிவர கிடைக்காமல் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சேதுக்குவாய்த்தான் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 12 பஞ்., கிராம மக்களும் பயனடைவர். பொது கணக்கு எண்&1ல் போதிய நிதி இல்லாமல் அத்தியாவசிய பணிகள் செய்ய முடியாமல் தலைவர்கள் சிரமப்படுவதால் அதிகமான நிதியை வழங்க வேண்டும். முதியோர் மற்றும் விதவைகளுக்கு வழங்கும் உதவித்தொகைகளை 60 வயது தாண்டும் அனைத்து நபர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மேலாத்தூர் பஞ்., தலைவர் சதிஷ்குமார், துணை செயலாளர் ஸ்ரீவெங்கடேசபுரம் பஞ்., தலைவர் பெரியசாமி ஸ்ரீதர், பஞ்., தலைவர்கள் அழகப்பபுரம் பூமாரி பாலமுருகன், அங்கமங்கலம் பாணுப்பிரியா, கடையனோடை பூல்பாண்டி, கருங்கடல் நல்லதம்பி, கருவேலம்பாடு நயினார், கட்டாரிமங்கலம் கீதா, குறிப்பன்குளம் சிவந்திக்கனி, மளவராயநத்தம் மாரியம்மாள், மீரான்குளம் சிவபெருமாள், மூக்குப்பீறி கமலா, நாலுமாவடி இசக்கிமுத்து, புறையூர் செல்வக்குமார், ராஜபதி சௌந்தரராஜன், சேக்குவாய்த்தான் சுதா சீனிவாசன், சுகந்தலை வெங்கடேசன், திருக்கோளூர் பிரபஞ்சன், உடையார்குளம் தேவராஜ், வெள்ளமடம் ஜேஸ்மின், குருகாட்டூர் பஞ்., துணைத்தலைவர் ராஜ்குமார், ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவீன்குமார், எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பாலமுருகன், வக்கீல் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அழகப்பபுரம் பஞ்., தலைவர் பூமாரி மற்றும் பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here