போதைபொருள் கடத்தல், தாதுமணல் கடத்தல், செம்மரக்கட்டை கடத்தல் – தூத்துக்குடியில் தொடரும் கடத்தல்கள்

0
25
crime

சிங்கம் திரைப்படத்தில் ‘தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஆயுதம் கடத்தப்படுகிறது’ என்று என்று சொல்வார்கள். அது உண்மையென நிரூபிக்கும் வகையில் தாதுமணல் கடத்தல், செம்மரகட்டைகள் கடத்தல், போதைப்பொருள் கடத்த என்று தூத்துக்குடி துறைமுகம் வழியாக நடைபெற்று வருவதை அவ்வப்போது பிடிபடுவதை வைத்து பார்க்க முடிகிறது. இதெல்லாம் எத்தனை தடவை பிடித்தாலும் தொடர்ந்து கடத்தல் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

அந்த வகையில் இப்போது ரூ.10 கோடி மதிப்பிலான செம்மரக்கடைகள் கடத்த இருந்ததை போலீசார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியாபுரம் தூத்துக்குடி போல்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் ராக்கேஷ் என்பவருக்கு சொந்தமான யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் நிறைய செம்மரக்கட்டைகள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே ரூரல் டி.எஸ்.பி சந்தீஷ் தலைமையில் போலீசார் லாரியை சோதனையிட்டனர். அதில் 20 டன் எடையுள்ள செம்மரக்கடைகள் இருப்பது தெரியவந்தது. மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டார்.

செம்மரக்கடைகள் இருந்த லாரி மில்லர்புரத்தை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமானது என்றும் ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டு இங்கிருந்து துறைமுகம் வழியாக வெளிநாட்டிற்கு கடத்துவதற்கு தயாராக இருந்தது என்றும் விசாரணையில் தெரியவந்தது.

லாரியுடன் செம்மரக்கடைகளை பறிமுதல் செய்த புதியம்புத்தூர் போலீசார், வழக்கம்போல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here