கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

0
19
latha mangeshar

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த மூன்றாவது அலையில் நாள்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா தொற்றுக்கு அரசியல், விளையாட்டு மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் லதா மங்கேஷ்கர். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அவரது மருமகள் ரச்சனா உறுதிப்படுத்தி உள்ளார். லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று காரணமாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 92 வயதான லதா மங்கேஷ்கர் 36 மொழிகளில் பாடியுள்ளார். இந்தியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here