கோவில்பட்டி அருகே விவசாய நிலங்களில் தீடீர் தீ – பயிரிடப்பட்ட மக்காச்சோளம் மற்றும் கால்நடை தீவன நாற்று சேதம்

0
150
kovilpatti fire news

கோவில்பட்டி அருகேயுள்ள காளாம்பட்டி கிராமத்தில் இருந்து சுமார் 1கிலோமீட்டர் தொலைவில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து இன்று மதியம் அதிகளவில் கரும்புகை வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் அங்கு சென்று பார்த்த போது, நிலத்தில் அறுவடை செய்யப்படமால் இருந்த மக்காச்சோளம், அறுவடை செய்து வைத்திருந்த மக்கர்ச்சோளம் மற்றும் கால்நடை தீவன நாற்றுகள் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனை தொடர்ந்து விவசாயிகள் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தீயணைக்க முயற்சி செய்தனர். காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென அடுத்தடுத்த நிலங்களுக்கு பரவ ஆரம்பித்தது. இந்த தீவிபத்தினால் காளாம்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் 9ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச் சோளப் பயிரில் முற்றிலுமாக சேதமடைந்தது. செல்வகுமார் நிலத்தினை‌ குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அருகில் இருந்த 30 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் மக்காச்சோள தட்டைகள் மற்றும் கால்நடை தீவன நாற்றுகள் சேதமடைந்தன.கடந்த ஆண்டு படைப்புழுதாக்கத்தினால் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்த நிலையில் இப்பகுதியில் இன்று ஏற்பட்ட தீ விபத்தினால் மக்காச்சோள பயிர்கள் சேமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதனால் அரசு கணக்கீட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தீ விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here