பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் விமர்சித்த நடிகர் சித்தார்த் கருத்துக்கு, செய்னா நேவல் கண்டனம்

0
17
sidharth news

பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் விமர்சித்த நடிகர் சித்தார்த் கருத்துக்கு, செய்னா நேவல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, பாதுகாப்பு குளறுபடிகளால் பயணத்தை ரத்து செய்து டில்லி திரும்பினார். இதுகுறித்து இந்திய பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல், வெளியிட்ட செய்தியில்,’எந்த நாட்டில் பிரதமர் பாதுகாப்பில் சமரசம் செய்யப்படுகிறதோ, அந்த நாடு பாதுகாப்பாக இருப்பதாக கூற முடியாது, இதனை கண்டிக்கிறேன்,’ என்றார்.

இதற்கு நடிகர் சித்தார்த், பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் ‘சப்டில் காக்’ உலக சாம்பியன் என செய்னாவை விமர்சிக்க சர்ச்சை கிளம்பியது. தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சித்தார்த் விளக்கம் அளித்தார். இருப்பினும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா வலியுறுத்தினார்.

இதுகுறித்து செய்னா நேவல் வெளியிட்ட செய்தியில், ‘சித்தார்த் என்ன அர்த்தத்தில் தெரிவித்தார் என எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவரை ஒரு நடிகராக எனக்கு பிடிக்கும். அவர் தெரிவித்த கருத்து நன்றாக இல்லை. இன்னும் சிறந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கலாம்,’ என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here