மந்தித்தோப்பு துளசிங்க நகரில் ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயத் திருவிழா

0
14
kovilpatti

மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயத் திருவிழாவினை முன்னிட்டு நாள் கால்நடுதல் காப்புக் கட்டுதல் விழா நடைபெற்றது.

கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயத் திருவிழாவினை முன்னிட்டு நாள் கால்நடுதல் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் திருப்பள்ளியெழுச்சி அதைதொடர்ந்து காலை 7 மணிக்கு மஞ்சள் மாபொடி திரவியம் பால் தேன் மற்றும் சந்தனம் பூர்ன கும்பாபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.

நாள் கால்நடுதலும் காப்புக் கட்டுதலும் சிறப்பு தீபாராதனையும் லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் பூஜைகளை செய்தார்கள். இதில் சுப்பாராஜ் சங்கரேஸ்வரி, மாரியப்பன், மாரிஸ் வரன், மற்றும் திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, பூமாலெட்சமி, மாரி, மற்றும் ஊர் பொதுமக்கள் மூக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியுடன் பூஜையில் கலந்து கொண்டார்கள். நிறைவாக அன்னா பிரசாதம் வழங்கப்பட்டது இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்தார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here