கோவில்பட்டி நகராட்சி 27ஆவது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி முற்றுகை

0
11
kovilpatti news

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட வள்ளுவர் தெரு, கக்கன்ஜீநகர், அசோக் நகர், வ.உ.சி நகர் கிழக்குப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி நகராட்சி 27ஆவது வார்டு பகுதியான வள்ளுவர் தெரு, கக்கன்ஜீநகர், அசோக் நகர், கதிரேசன் கோயில் பிரதான சாலை, வ.உ.சி நகர் கிழக்கு சாலை பகுதிகளில் சாலை வசதி, வாறுகால் வசதி, சீரான குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், குடிநீர் விநியோகத்தை இரவு நேரங்களில் விநியோகிப்பதை விட்டுவிட்டு, காலை அல்லது மாலை நேரங்களில் விநியோகிக்க வேண்டும், வாறுகாலை முறையாக சுத்தம் செய்து, கழிவுநீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மு.செண்பகராஜ் தலைமையில் நகராட்சி அலுவலத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கோரிக்கை மனுவை நகராட்சி பொறியாளர் ரமேஷிடம் அளித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here