தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள், செம்மொழித் தமிழாய்வு கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

0
14
modi news

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று (ஜன.,12) காணொளி வாயிலாக திறந்து வைத்தார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன கட்டிடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களை தேர்வு செய்து அந்த மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை துவங்க எடுக்கப்பட்ட நடவடிக்கையின்படி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவக் கல்லூரிகள் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும் பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின், மத்திய சுகாதார அமைச்சர், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், பெரும்பாக்கத்தில் 24.65 கோடி மதிப்பிலான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன கட்டிடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தபிறகு பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் அரசு விழா. அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி என்பது கருணாநிதியின் கனவு. திமுக தேர்தல் அறிக்கைகளில் மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக வாக்குறுதி தந்துள்ளோம். கருணாநிதியின் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. பல்வேறு மருத்துவ திட்டங்களில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.

தமிழகத்தின் மருத்துவ மாணவர் சேர்க்கை முறைக்கு மத்திய அரசு ஒப்புதல் தர வேண்டும். கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எங்களது கொள்கைநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு விலக்கு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here