தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நல்ல தண்ணீருக்குள் கழிவு நீர் கலக்கும் அவலம்

0
37
crime

ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தஸ்து உயர்த்திருப்பதை நினைத்து வரவேற்பவரும் இருக்கிறார்கள். நீண்ட காலம் இழுக்கும் இந்த பணியால் அல்லல் படும் மக்கள் அதிருப்தியையும் தெரிவிக்கிறார்கள். மேலும் பராமரிப்பு பணியில் குறைபாடுகள் இருப்பதாகவும் குற்றசாட்டு கூறப்பட்டு வருகிறது.

இது குறித்து முன்னாள் கவுன்சிலரும் காங்கிரஸ் பிரமுகருமான சந்திரபோஸ் கூறும்போது, ’’மாநகராட்சி பணிகள் எதுவுமே ஒழுங்காக நடைபெறவில்லை. சிறு சிறு வேலைகள் கூட முறையாக நடைபெறுவதில்லை. பள்ளம் பள்ளமாகத்தான் கிடக்கிறது மேடு மேடாகத்தான் கிடக்கிறது. எதாவது பொதுமக்களுக்கு பாதிக்கும்படி கிடப்பதை அதிகாரிகளிடம் நாம் சொன்னால் கூட அவரகள் கண்டு கொள்வதில்லை. செய்கிறோம் என்கிறார்கள் நடப்பதில்லை. மீண்டும் கேட்டாள் ஆள் இல்லை என்கிறார்கள். ஒப்பந்த காரர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே சரியான புரிதல் இல்லை. ஒப்பந்தகாரர்கள் செய்யும் வேலைக்கு நிர்வாகம் உடனே காசு கொடுப்பதில்லை. அதனால் ஒப்பந்தகாரர்கள் எதையும் உடனே செய்வதில்லை.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல பகுதிகளில் ஏர்டெல் கேபிள் பதிக்கும் வேலை நடந்து வருகிறது. அப்போது குடிதண்ணீர் குழாய்கள் பல இடங்களில் சேதப்பட்டிருக்கிறது. அப்படித்தான் ஆசிரியர்காலனி 3, 4 வது தெருக்கள், சின்னமணிநகர், பி எண்ட் டி காலனி போன்ற பகுதிகளில் குடி தண்ணீர் குழாய் சேதபட்டிருக்கிறது. அதனால் குடிதண்ணீர் அந்த வழியாக வெளியேறுகிறது. அப்படி வெளியேறும் தண்ணீர் ரோட்டில் தேங்கி கிடக்கிறது. தண்ணீர் திறந்துவிடப்படும் சுமார் இரண்டரை மணி நேரம் நோட்டில் அந்த தண்ணீர் தேங்கி கிடக்கிறது. தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டதும் ரோட்டில் தேங்கி கிடக்கும் அனைத்து தண்ணீரும் அப்படியே வந்த வழியே குழாய்க்குள் இழுக்கப்பட்டுவிடுகிறது. சுமார் இரண்டரை மணிநேரம் ரோட்டில் கழிவுடன் கலந்த தண்ணீர், குடிதண்ணீர் குழாய்க்குள் போய் சேர்ந்துவிடுவதை உடனே தடுக்க வேண்டாமா?. இதை நேரில் பார்க்கும் எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை சொல்லிவிட்டேன். ஆனால் அவர்கள் காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள். சேதப்படுத்திய ஏர்டெல்காரர்களை பிடித்து அதை சரி செய்ய சொல்லலாம். அதை கூட இந்த அதிகாரிகள் செய்ய தயாராக இல்லை. ஏர்டெல் நிறுவனம் குழி தோண்டுவதற்கு ஏற்கனவே பணம் கொடுத்துவிடுகிறது. அது அனுமதிக்கான கட்டணம்தான். அப்படியிருக்கும் போது எந்த வழியிலாவது அவசரமாக செய்ய வேண்டிய வேலையை அவசரமாக செய்ய வேண்டும் அல்லவா?. இனிமேலாவது விரைந்து நடவடிக்கை எடுத்து நல்ல தண்ணீருக்குள் கழிவு நீர் கலப்பதை மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பார்கள் என நம்புகிறோம்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here