கூட்டாம்புளி ”அன்பு உள்ளங்கள் ” ஆதரவற்றோருக்கு மாவட்ட எஸ்.பி புத்தாடை, இனிப்புகள் வழங்கினார்

0
15
tuty s.p news

தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளி அன்னை தெரஸா நகரில் ‘அன்பு உள்ளங்கள்” என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் என 150க்கும் மேற்பட்ட ஆதவற்றோர் இருக்கின்றனர்.

தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு அவர்களுடன் இணைந்து கொண்டாட தூத்துக்குடி மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் முடிவு செய்தார். அதன்படி இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினார்.

அப்போது அவர், இந்த பொங்கல் விழா தமிழர்களின் பாராம்பரிய திருவிழாவாகும். இத்திருவிழா விவசாயத்திற்கு மரியாதை செய்ய உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விழாவாகும். கடந்த வருடம் போன்று இந்த வருடமும் இந்த பொங்கல் விழாவை உங்களுடன் சமத்துவ பொங்கல் வைத்து, புத்தாடைகள் வழங்கி கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். உங்களுக்கு உதவி செய்ய காவல்துறையாகிய நாங்கள் இருக்கிறோம்’’ என்று ஆறுதலான வார்த்தைகள் கூறினார். மேலும் அங்கிருந்த அனைவருக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி பொங்கல் வாழ்த்துக்கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஆதவரற்றோர் இல்ல நிர்வாகிகள் விஜயா சத்யா சாமுவேல், பொன்சீலி, நிர்வாக உதவியாளர் தங்க தீபா, சமூக ஆர்வலர் ராஜா ஸ்டாலின் மற்றும் காப்பக பணியாளர்கள் மற்றும் காப்பகத்தில் உள்ளவர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here