ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டி ஆதரவு கோலமிட்டு பொங்கலிட்ட கிராம மக்கள்

0
65
sterlite news

தூத்துக்குடியில் 20 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை, அரசியல் காரணங்களுக்காக எழுந்த போராட்டத்தின் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆலை மூடப்பட்டிருக்கிறது. இதனால் அதில் பணியாற்றியோர், அந்த ஆலையை வாழ்வாதாரமாக கொண்டிருந்த சுற்றுவட்டார மக்கள் மற்றும் மாநகர் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே ஆலைக்கு எதிராக சொல்லப்படும் குற்றசாட்டில் அறிவியல் ரீதியாக எந்தவித குறைபாடும் நிரூபிக்கப்படாத நிலையில் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள மக்கள் அவ்வப்போது ஆலையை திறக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் புத்தரிசியில் பொங்கல் வைக்கும் போது வீட்டின் முன்னால் பெண்கள் வண்ணக் கோலங்கள் போடுவார்கள். அந்த வகையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள அய்யனடைப்பு, சாமிநத்தம். ராஜாவின் கோவில். தெற்கு வீரபாண்டியபுரம். தெற்கு சிலுக்கன்பட்டி. வடக்கு சிலுக்கன்பட்டி. சில்லாநத்தம். பண்டாரம்பட்டி. மடத்தூர். புதூர் பாண்டியாபுரம். சங்கரபேரி. சில்வர்புரம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள பல வீடுகளில் பொங்கலின் போது வீட்டின் முன் வரையப்பட்ட வண்ணக் கோலத்தின் முன் பொங்கலோ பொங்கல் என்ற வாசகத்துடன் ஸ்டெர்லைட் வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை மக்களின் வாழ்வாதாரம்,ஸ்டெர்லைட் மரம் போல் என்றும் செழித்து வளரும், திறக்கட்டும்.. திறக்கட்டும்.. ஸ்டெர்லைட் திறக்கட்டும், நீதி வேண்டும்.. மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். வேண்டும் வேண்டும் ஸ்டெர்லைட் வேண்டும் போன்ற வாசகங்களை கோலத்தின் முன்னால் எழுதி தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

சிலர் ஸ்டெர்லைட் ஆலை செய்த மருத்துவ வசதி உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை தங்களது கோலத்தில் வரைந்திருந்தனர். மாற்றத்தை உருவாக்குவோம் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஆதரவு கொடுப்போம் என்ற வாசகங்களை எழுதி கோலங்கள் வரைந்து இருந்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் முன்பு இவ்வாறு கோலம் வரையப்பட்டிருந்தன.

இதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் ஆலையை திறக்க ஆதரவு கொடுத்து வருவது தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here