நாசரேத்,மார்ச்.01:தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா படங்கள் இல்லாமல் துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டி டத்தை திறக்க நாசரேத் அதிமுகவினரிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பின் முதல்வர் படங்கள் வைத்த பின்னரே புதியக் கட் டிடம் அதிகாரிகளால் திறந்து வைக்கப்பட்டது.
நாசரேத் கே.வி.கே.சாமி சிலை பஜாரில் துணை வேளாண்மை விரிவாக்கமையம் கட்டிடம்கட்டுவதற்கு 15செண்டு இடங்கள் 15ஆண்டுகளுக்கு முன் பேரூராட்சி நிர்வாகத்தால் வேளாண்மைத் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது.ஆனால் கடந்த ஆண்டுவரையிலும் அதற்கான கட்டிடங்கள் கட்டப்படாமல் இடம் பாழடைந்து காணப்பட்டது.இதன்பின்னர் விவசாயிகளின் கோரிக்கைணை ஏற்று தமிழக அரசு 30 இலட்சம்நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தது.அதன்பின்னரும் பணிகள் துவக்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது புதியக் கட்டிடம் கட்டப்பட்டு நீண்ட நாள்களாக திறக்கப்படாமல் காணப்பட்டது.
கடந்த மாதம் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவிற்கு வருகைதந்த தமிழக முதல்வர் பணிகள் நிறைவு பெற்ற இந்தக்கட்டிடத்தையும் திறந்து வைப்பார் என நாசரேத் வட்டார விவசாயிகள் நம்பினர்.ஆனால்அதிகாரிகள் அதற்குரியநடவடிக்கையை எடுத்ததாக தெரியவில்லை. இதனிடையே கடந்த 28- ஆம் தேதி கட்டிடத்தை திறக்க அதிகாரிகளே துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடத் திறப்புவிழாவிற்கு நாள்குறித்தனர்.
ஆனால் புதிய அலுவலகத்திற்குள் தமிழகமுதல்வர் எடப்பாடிபழனிச்சாமி,முன்னாள் முதல்வர் மறைந்தஜெயலலிதா ஆகியோரதுபடங்கள் இடம்பெறாதததைக்கண்டு அதிமுகவினர் வெகுண்டெழுந்து முன்னாள் ஒன்றிய அம்மாபேரவை செயலாளர் ஞானையா தலை மையில் மேற்படி படங்கள் இடம் பெற்றபின்னரே கட்டிடம் திறக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கூட்டமாக,கூடியதால் அதிகாரிகள் முதல்வர்கள் படங்களை வைத்து பின்னர் திறப்புவிழாவை நடத்தினர்.இதனால் கட்டிட திறப்பு விழா நடைபெற ஒரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது.
நாசரேத் கே.வி.கே.சாமி சிலை பஜாரில் துணை வேளாண்மை விரிவாக்க மையக்கட்டிடம் ரூபாய் 30 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு அதன் திறப்புவிழா நடை பெற்றது.விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட வேளாண்மைத்துறை இணை இளக்குனர் முஹைதீன் தலைமைவகித்து புதியக்கட்டித்தை திறந்துவைத்து குத்து விளக்கேற்றி வைத்தார்.
விழாவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளர் ஜாஹீர் உசைன், உதவி பொறியாளர்கள் சங்கர்ராஜ், நடராஜன், வள்ளியூர் வேளாண்மை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன், தென்கரை பாசன விவசாயசங்க செயலாளர் ராஜேந்திரன் உள்பட தென்கரைக்குளம், நொச்சிக்குளம், முதலைமொழி, தேமான்குளம்,
பேய்க்குளம்,வெள்ளமடம்,பழனியப்பபுரம் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக ஆழ்வார்திருநகரி வேளாண்மை உதவி இயக்குனர் அல்லிராணி வரவேற்று பேசினார். ஆழ்வார்திருநகரி வேளாண் அலுவலர் திருச்செல்வன் நன்றி கூறினார்.