கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் இருப்பதால், பள்ளி,கல்லூரிகளை முறைப்படுத்துவது அவசியமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இம்மாதம் 31ம் தேதி வரை கல்லூரிகள் மற்றும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாணவர்களுக்கு ஆன் லைன் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இதில் 10, 11,12 வகுப்புகள் நேரடியாக நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே தொடர்ந்து கொரோனா தடுப்பு விதிமுறை நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் 10, 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கும் 31ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது.அதற்கான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.