குடியரசு தின விழா அணிவகுப்பில் வ.உ.சி., வேலுநாச்சியார், பாரதியார் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுப்பு

0
140
national news

டில்லியில் ஜன.,26ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது விடுதலை போராட்ட வீரர்களை அமதிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் 72வது குடியரசு தினவிழா வரும் ஜன.,26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக ஆண்டுதோறும் ஜன.,26ல் டில்லியில் 1.25 லட்சம் பார்வையாளர்களுடன் நடக்கும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, 25 ஆயிரம் பேர் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் இந்தாண்டும் டில்லியில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால், குடியரசு தின விழாவில் 24 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.

இந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் ஒவ்வொரு மாநிலத்தின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் கொண்ட அலங்கார ஊர்திகள் இடம்பெறும். அந்த வகையில், இந்தாண்டு வ.உ.சி., வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய தமிழகத்தின் அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், வ.உ.சி., வேலுநாச்சியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என்றும் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here