பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீகணேசர் பள்ளியில் பொங்கல் விழா

0
58
pongal viza

குரும்பூர், ஜன. 20

குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீகணேசர் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீகணேசர் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. செல்வ விநாயகர் கல்வி அபிவிருத்தி சங்க தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். பொருளாளர் விஜயசேகர் வாழ்த்தி பேசினார். தலைமையாசிரியர் வித்யாதரன் வரவேற்றார். பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பொங்கலிட்டனர். நிகழ்ச்சிகளை தமிழாசிரியர் ராஜகுமார் தொகுத்து வழங்கினார்.

தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினர். இதில் செல்வவிநாயகர் கல்வி அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ராமமூர்த்தி, சதீஷ்ராஜ், பொன்சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். துணை தலைமையாசிரியர் ஜேசுதாசன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை முதுகலை பொருளியல் ஆசிரியர் சுரேஷ் காமராஜ் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here