கிரிக்கெட் போட்டியில் மீண்டும் இந்தியாவை வென்றது தென்ஆப்பிரிக்கா

0
146
sports

பார்ல்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, 0-2 என தொடரை பரிதாபமாக இழந்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி,மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டி பார்ல் நகரில் நடந்தது. இந்திய ‘லெவன்’ அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. தென் ஆப்ரிக்க அணியில் ‘ஆல்-ரவுண்டர்’ மார்கோ ஜான்சென் நீக்கப்பட்டு வேகப்பந்துவீச்சாளர் சிசண்டா மகாலா சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் லோகேஷ் ராகுல் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு ஷிகர் தவான் (29) நல்ல துவக்கம் தந்தார். விராத் கோஹ்லி ‘டக்-அவுட்’ ஆனார். பின் இணைந்த கேப்டன் ராகுல் (55), ரிஷாப் பன்ட் (81) அரைசதம் கடந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் (11) நிலைக்கவில்லை. வெங்கடேஷ் ஐயர் (22) ஆறுதல் தந்தார். கடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் (40), அஷ்வின் (25) கைகொடுத்தனர்.இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 287 ரன் எடுத்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் ஷம்சி 2 விக்கெட் கைப்பற்றினார்.

சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு மலான் (91), குயின்டன் டி காக் (78) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. கேப்டன் பவுமா (35) ஓரளவு கைகொடுத்தார். பின் இணைந்த மார்க்ரம், வான் டெர் துசென் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. தென் ஆப்ரிக்க அணி 48.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 288 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மார்க்ரம், துசென் தலா 37 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் பும்ரா, சகால், ஷர்துல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தென் ஆப்ரிக்க அணி 2-0 என தொடரை கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here