தூத்துக்குடி மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல்

0
132
admk news

தூத்துக்குடி,ஜன.22:

தமிழக நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. அதன் அடிப்படையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களாக போட்டியிடும் நபர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் இன்று(22.01.2022) சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் தூத்துக்குடி பானு பிருந்தவன் கிரீன் பார்க் மினி ஹாலில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை வகித்தார். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஆறுமுகநயினார், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி மாநில இணை செயலாளர் பெருமாள் சாமி, மாவட்டக் கழக அவைத் தலைவர் திருப்பாற்கடல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது தூத்துக்குடி மாநகராட்சி வார்டுகளுக்கு விருப்பமனு செய்த அதிமுக நிர்வாகிகளை தனித்தனியே அழைத்து மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் விவரங்களைக் கேட்டறிந்தார். மேலும், திருச்செந்தூர், காயல்பட்டினம் நகராட்சி மற்றும் பேரூராட்சி கழக நிர்வாகிகளிடம் தேர்தலுக்கு தேவையான பணிகளை இன்றே துவங்குங்கள் என ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக இணைச் செயலாளர் செரினா பாக்யராஜ், துணைச் செயலாளர்கள் ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, சந்தனம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் டாக் ராஜா, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் யு.எஸ்.சேகர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் சுதர்சன் ராஜா, பகுதி கழக செயலாளர்கள் ஜெய்கணேஷ், பொன்ராஜ், நட்டார் முத்து, ஒன்றிய கழக செயலாளர் காசிராஜன்,

முன்னாள் நகராட்சி சேர்மன் மனோஜ் குமார், நகரக் கழகச் செயலாளர்கள் காயல் மௌலானா, மகேந்திரன், செந்தமிழ் சேகர், ரவிச்சந்திரன், கோபாலகிருஷ்ணன், சோமசுந்தரம், ஆறுமுக நயினார், கிங்ஸ்லி, காசிராஜன், துரைச்சாமி ராஜா, வேதமாணிக்கம், அசோக்குமார், நிர்வாகிகள் சத்யா லட்சுமணன், வக்கீல் முனியசாமி, கோமதி மணிகண்டன், வக்கீல் செங்குட்டுவன், வலசை வெயிலுமுத்து, திருச்சிற்றம்பலம், புல்டன் ஜெசின், எஸ்.கே. மாரியப்பன், ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், லட்சுமணன், சுந்தரேஸ்வரன்,

பரிபூரண ராஜா, வக்கீல் சரவணபெருமாள், ஜான்சன் தேவராஜ், மைதீன், வெங்கடேஷ், மனுவேல் ராஜ், நிலாசந்திரன், கொம்பையா, பழனிசாமி பாண்டியன், முன்னால் மாமன்ற உறுப்பினர்கள் சுடலைமணி, முபாரக் ஜான், முத்துமதி, சாந்தி, உமா, தனலட்சுமி பெரியசாமி, சந்தனபட்டு, சந்திரா செல்லப்பா, சந்திரா பொன்ராஜ், தவசிவேல், தமிழரசி, உள்ளிட்ட நிர்வாகிகளும் மாநகர வட்டக் கழக செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது அமமுக சண்முகபுரம் பகுதி தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அபுதாஹிர் அக்கட்சியில் இருந்து விலகி எஸ்பி சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here