”மனு கொடுத்ததும் முதியோர் உதவித் தொகை உடனே கிடைக்கிறது” – அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன்

0
68
minister nitha rathakrishnan

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் அரசு சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை 41 பயனாளிகளுக்கு மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வழங்கினார். அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், உடனிருந்தார்.

அதில், அமைச்சர் பேசும்போது, ’’தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தந்து கொண்டிருக்கிறார். கடந்த காலம் முதியோர் உதவித்தொகை என்பது மனு அளித்த உடனே வழங்கப்படவில்லை, அது உடனே கிடைத்துவிடாது. ஆனால் இப்போது தகுதியுள்ள அத்தனை முதியோர்களுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை உடனே வழங்குவதற்கு ஆணை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைக்கு 24 மணி நேரத்தில் 22 மணி நேரம் மக்களுக்கு உழைக்கக்கூடிய தலைவராக இருக்கின்றார்.

அவர், கடந்த மழை வெள்ள நேரத்தில் அவர் ஒவ்வொரு இடமாக நேரில் சென்று மக்களுக்கு நன்மை செய்ததை மக்கள் பாராட்டி வருகின்றனர். அது தொழிலாளியாக இருந்தாலும் சரி, மீனவராக இருந்தாலும் சரி, வர்த்தகர்களாக இருந்தாலும் சரி அத்தனை பேருக்கும் எந்தவித குறைவும் இன்றி நன்மை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் பணியாற்றி வருகிறார்.

அதுபோல தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியும், ஏழை, எளிய மக்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்க்க வேண்டுமோ, அதற்காக தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

அந்த வகையில் திருச்செந்தூர், ஆலந்தலை, காயாமொழி, கீழ்திருச்செந்தூர் ஆகிய பகுதியில் மக்களுக்கு இன்று பட்டா, முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டது. தன்னை காப்பாற்ற யாரும் இல்லையே என்று ஏங்கும் முதியோர்களுக்கு நான் இருக்கிறேன் என்று சொல்லும் வகையிலே தமிழ்நாடு முதலமைச்சர் முதியோர் உதவித்தொகை கொடுத்துக் கொண்டிருக்கிறார்’’ என்றார் அமைச்சர்.

இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வட்டாட்சியர் சுவாமிநாதன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், தி.மு.க. மாணவரணி மாநில துணை செயலாளர் உமரிசங்கர் முக்கிய பிரமுகர் ராமஜெயம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here