அனைவருக்கும் இந்திய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் – நடுநிலை.காம்

0
107
re-public day

உலகில் உன்னத நோக்கங்களையும், உண்மைகளையும் வெளிப்படுத்தும் இந்தியாவின் 73-வது குடியரசு தினம் இன்று. இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. மக்களாட்சிக்கு இன்னொரு பெயர் குடியரசு.

அப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறை உருவாக்கப்பட்ட நாளே இன்று. 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, பிரிட்டீஸ் ஆட்சிக்கு உள்பட்ட சுய ஆட்சி அதாவது டொமினியன் அந்தஸ்துதான் வழங்கப்பட்டிருந்தது. பிரிட்டீஸார் நியமித்த கவர்னர் ஜெனரலே நம் நாட்டின் தலைவராக இருந்தார்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, 1950ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி அது நடைமுறைக்கு வந்தது. அன்று வரை பதவியில் இருந்த பிரிட்டீஸாரின் கவர்னர் ஜெனரல் நீக்கபட்டு, ஜனாதிபதி பதவி உருவானது. இந்தியா தனித்துவமாக நிர்வாகம் பார்க்க கூடிய குடியரசு நாடானது. அந்த நாள் இந்த நாளே. இந்த நாளை அனைவரும் கொண்டாடி மகிழ்வோமாக..!

நடுநிலை.காம் ஏ.ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here