”தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக ஒன்றியங்களில் வரும் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை ஊர்கிளை, உட்கிளை தேர்தல்” – அனிதாராதாகிருஷ்ணன் அறிக்கை

0
236
anitha radhakrishnan news

இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

‘’திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளபடி தலைமைக்கழக தேர்தல் மேற்பார்வையாளர் பாலவாக்கம் சோமு ஆலோசனையின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் 15ஒன்றியங்களிலுள்ள ஊராட்சிகளில் ஊர்கிளை, உட்கிளை தேர்தல் வரும் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை குறிப்பிட்டுள்ள இடங்களில் தேர்தல் ஆணையாளர்கள் தலைமையில் நடக்கிறது.

இதன்படி மார்ச் 6ம் தேதி காலை 10மணி முதல் மதியம் 2மணி வரை கருங்குளம் தெற்கு ஒன்றியத்தில் கருங்குளம் பி.எம்.எஸ்.திருமண மண்டபத்தில் தேர்தல் ஆணையாளரான தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகப்பெருமாள் தலைமையிலும், சாத்தான்குளம் தெற்கு ஒன்றியத்தில் தேர்தல் ஆணையாளரான ஸ்பிக் நகர் பகுதி பொறுப்பாளர் தென்னரசு தலைமையிலும், அன்று மாலை 3மணி முதல் 7மணி வரை சாத்தான்குளம் வடக்கு ஒன்றியத்தில் சாத்தான்குளம் அந்தோணி திருமண மண்டபத்தில் தேர்தல் ஆணையாளரான வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பூங்குமார் தலைமையிலும் நடக்கிறது.

7ம் தேதி காலை 10மணி முதல் மதியம் 2மணி வரை கருங்குளம் வடக்கு ஒன்றியத்தில் வல்லநாடு தம்புராட்டி திருமண மண்டபத்தில் தேர்தல் ஆணையாளரான மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகப்பெருமாள் தலைமையிலும், கருங்குளம் கிழக்கு ஒன்றியத்தில் பொட்டலூரணி பாலாஜி திருமண மண்டபத்தில் வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையிலும், அன்று மாலை 3மணி முதல் இரவு 7மணி வரை திருச்செந்தூர் ஒன்றியத்தில் வீரபாண்டியன்பட்டணம் லிபார்டு காம்பளக்ஸ் ஜோ மஹாலில் தேர்தல் ஆணையாளரான மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரகுராமன் தலைமையிலும், உடன்குடி ஒன்றியத்தில் தண்டுபத்து அலுவலகத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சாத்ராக் தலைமையிலும் நடக்கிறது.

எனவே, மேற்கண்ட தேதிகளில் தேர்தல் நடைபெறும் இடங்களில் அந்தந்த ஒன்றியங்களிலுள்ள ஊராட்சிகளில் ஊர்கிளை, உட்கிளை பொறுப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய கட்டணத்துடன் தேர்தல் ஆணையாளரிடம் வழங்கி ரசீது பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் அனிதா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here