திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவின் 8ம் திருவிழா

0
87
thiruchnedur murugan

தூத்துக்குடி, மார்ச் 6

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவின் 8ம் திருவிழாவான இன்று சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் மரிக்கொழுந்து மணக்கமழ வீதி உலா வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கண் சாத்தி வழிப்பட்டனர். இந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (8ம் தேதி) நடக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி உற்சவ திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி சப்பரத்தில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளினர். இத்திருவிழாவின் 8ம் நாளான இன்று(6.03.2020) நேற்றுஅதிகாலை சுவாமி சண்முகர் அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாந்தி தையல்நாயகி வகைறா மண்டப்பபடியிலிருந்து வெள்ளிசப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து சிவன் கோயிலை சேர்ந்தார்.

அங்கு சுவாமி சண்முகருக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகருக்கு உபயதாரர் சார்பில் அபிஷேகம் அலங்காரம் நடந்தது. பின்னர் பகல் 12 மணிக்கு பச்சை பட்டு சாத்தி கடைசல் சப்பரத்தில் மரிக்கொழுந்து மணகமழ பக்தர்களுக்கு காட்சியளித்தார். பச்சை சாத்தி சப்பரத்தில் வீதி உலா நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி சண்முகருக்கு பச்சை பட்டு தேங்காய் பழம் உடைத்து திருக்கண் சாத்தி வழிப்பட்டனர். சுவாமி சண்முகர் பச்சை சாத்தி சப்பரத்தில் எட்டுவீதிகளில் உலா வந்து அதிகாலையில் கோயிலை சேர்ந்தார்.

மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (8ம் தேதி) நடக்கிறது. காலை 6 மணிக்கு கும்ப லக்கனத்தில் முதலில் விநாயகர் தேரும், அதன்பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய தேரும், பின்னர் தெய்வானை அம்மன் எழுந்தருளிய தேரையும் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கின்றனர். இத்திருவிழா வரும் 10ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன் மற்றும் செயல் அலுவலர் அம்ரித் ஆகியோர் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here