நட்டாத்தியில் சிறந்த கால்நடைகளுக்கு வளர்ப்பாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி கோட்டத்திற்குட்பட்ட செபத்தையாபுரம் மற்றும் முள்ளக்காடு கால்நடை மருத்துவமனைகள் சார்பில் நட்டாத்தி மற்றும் பொட்டல்காடு பகுதிகளில் கால்நடைகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜன் தலைமை வகித்தார். உதவி இயக்குநர்கள் ஆண்டனி இக்னேஷியஸ்சுரேஷ் முன்னிலை வகித்தனர்.
உதவி மருத்துவர்கள் காசிராஜன், வேல்மாணிக்கவல்லி அடங்கிய மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சை அளித்தனர். நட்டாத்தியில், தேர்வு செய்யப்பட்ட சிறந்த கால்நடை வளர்ப்பாளர்களுக்கு நட்டாத்தி பஞ்சாயத்து தலைவி சுதாகலா பரிசு வழங்கி கவுரவப்படுத்தினார்.
முகாம் முடிவில், 1488ஆடு, மாடுகளுக்கு குடற்புழு நீக்கமும், 20பசுக்களுக்கு செயற்கை முறை கருவூட்டலும், 36பசுக்களுக்கு மலடுநீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
இதில், மருத்துவ உதவியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.