மாநில அளவில் சிலம்பம் விளை யாட்டு போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர் சாதனை!

0
172
nazareth news

நாசரேத்,மார்ச்.07:நாசரேத், மர்காஷிஸ் மேல் நிலைப் பள்ளி மாணவர் எம். தில்சன் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் விளையாட்டு நடசாரி பிரிவு போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்தார் .

கன்னியாகுமரி மாவட்டம் , செண்பகராமன்புதூரிலுள்ள எம்.இ.றி. பொறியியல் கல்லூரியில் வைத்து மாநில அளவிலான சிலம்பம் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் நாசரேத் , மர்காஷிஸ் மேல் நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவர் எம். தில்சன் ஜுனியர் பிரிவில் சிலம்பம் போட்டி நடசாரி பிரிவில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.

சிலம்பம் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்த மாணவர் தில்சனையும், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெபசிங் கால்டுவெல், சுஜித் என் செல்வசுந்தர் , தனபால் ஆகியோரையும் பள்ளியின் நிர்வாகி எ.டி.ஹெச். சந்திரன், தலைமை ஆசிரியர் ஆர். அல்பர்ட் , ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here