சோனியா, ஸ்டாலின், சிதம்பரம் தேசத் துரோகிகளே – தூத்துக்குடியில் ஹெச்.ராஜா பேச்சு !

0
279
h.raja news

தூத்துக்குடியில் ’தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம்’ என்கிற பெயரில் புதியதாக வியாபாரிகள் சங்கம் 8.3.2020 அன்று தொடங்கப்பட்டது. அந்த விழாவில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சங்கத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர், ‘’நாட்டியில் இன்றியமையாத மூன்று அதிகாரங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் வகையில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் ’சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கும் குடியுரிமை கொடு’ என்று போராடும் மிகக் கேவலமான நிலைமை இருப்பதில்லை. இதில் சோனியா வாக இருக்கட்டும் ஸ்டாலினாக இருக்கட்டும் சிதம்பரம் ஆக இருக்கட்டும் எல்லாருமே இந்த வகையில் தேசத்துரோகிகள்தான். சட்டவிரோதமாக குடியேற வந்தவருக்கு குடியுரிமை கேட்கலாமா யோசித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு நான் இந்த வியாபாரிகள் சங்க நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக ஒரு சில விளக்கங்களை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். சி.ஏ.ஏ, எ.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் இந்த மூன்றையும் வைத்துக் கொண்டு இன்றைக்கு நாட்டிலேயே சில அடிப்படைவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்

ஏற்கனவே 32 வரி இருந்ததை எல்லாம் ஜிஎஸ்டி வரி என்று ஒரே வரி திட்டத்தை கொண்டுவந்தபோதும் அதில் ஏதோ பெரிய தவறு இருப்பது போல் ஒரு மாயை தோற்றத்தை உருவாக்கினார்கள். அதுபோலவே இந்த சி ஏ ஏ, என் ஆர், சி.என்.பி.ஆர் ஆகியவற்றிற்கும் எதிராக போராட்டம் தூண்டி விடப்படுகிறது.

இந்திய குடியுரிமை சட்டம் 1955 ல் கொண்டுவரப்பட்டு விட்டது அதில் இதுவரை 4 திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. தற்போது திருத்தப்பட்டது ஐந்தாவது ஆகும். இதற்கு முன்பாக காங்கிரஸ் அரசு 3 சட்டத்திருத்தத்தை செய்திருக்கிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாட்டில் மத ரீதியாக வஞ்சிக்க பட்டோருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படுவதற்கான சட்ட திருத்தம் அது.

அதிலும் 31.12.2014 க்கு முன்பு வந்தவர்களுக்கு மட்டும்தான் குடியுரிமை வழங்க திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது 01.01.2015 அன்று வந்திருந்தால் கூட அது இந்துவாக இருந்தாலும் அவருக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை.

அப்போ மதரீதியான பாகுபாடு இதில் எங்கே இருக்கிறது ?. அதுல ஏன் முஸ்லிம்களை சேர்க்கவில்லை என்கிறார்கள். அதெல்லாம் இஸ்லாமிய நாடு. சுதந்திரம் வாங்கும்போதே இஸ்லாமிய நாடு என்று பிரிக்கப்பட்டவை. அப்படி நாட்டை பிரிக்கும் போது 22% முஸ்லிம்களுக்கு 33% தேசத்தை பிரித்துக் கொடுத்தாகிவிட்டது. ஆனால் அதில் முக்கால்வாசி பேர் இந்தியாவிலேயே தங்கி விட்டார்கள் இப்போ அதுதான் பிரச்சினை.

இந்த சட்டத்தால் இந்தியாவில் இருக்கிற எந்த முஸ்லிமுக்கும் பாதிப்பு வராது என்று போராட்டத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் பலருக்கு தெரியும் இருந்தாலும். பங்களாதேசத்தில் இருந்து இங்கு சட்டவிரோதமாக குடியிருக்கும் மூன்று கோடிக்கு மேல் உள்ளவர்கள் வெளியேற வேண்டிய நிலைமை வரும் என்றபடியால் இந்த போராட்டத்தை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் இந்திய முஸ்லிம்களுக்காக போராட்டம் நடத்தவில்லை. சட்டவிரோதமாக இங்கே ஊடுருவி இருக்கிற அன்னியர்களுக்காக போராட்டம் நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் எல்லாம் சோனியாவிலிருந்து ஸ்டாலின் வரை ஒன்னு ’நான் இந்தியன்’ இன்னொன்னு ’ஆண்டி இந்தியன்’. இவங்க ரெண்டு பேரும் இந்த போராட்டங்களுக்கெல்லாம் ஆதரவாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இவர்களின் ஓட்டர்ஸ் தானே அதனாலதான்.

எங்க ஊர்ல ஒரு ஆளு வெளிநாட்டுல போய் படிச்சாராம் அறிவே இல்லாதவருக்கு அறிவுஜீவி என்று பெயர். அவர் கேட்கிறார் வேலி தாண்டி வந்தவனை என்ன பண்ண என்கிறார். நானெல்லாம் அவர் மாதிரி வெளிநாட்டுல போய் படிக்கல ரஜினிகாந்த் மாதிரி ரீல் அண்ணாமலை இல்லை, வீடு விடா போய் பால் ஊத்திய ரியல் அண்ணாமலை. அதனால எனக்கு என்ன தெரியுது வேலி தாண்டி மாடு வந்தா அதை விரட்டி விட்டு வேலியை சரியாக அடக்கவேண்டும் என்று. நீங்க இவ்வளவு நாள் இருந்தீங்க சிதம்பரம் அவர்களே நீங்க வேலியை சரியா கவனிக்கவில்லை. நாங்க வேலியை நன்றாக கவனிக்கிறோம் அவ்வளவுதான்.

NPR என்பது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு. இது அசாம் மாநிலத்தில் பங்களாதேசை சேர்ந்தவர்கள் அதிகம் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதால் அவர்களை கண்டறிய உருவாக்கப்பட்டது. அசாமில் நடந்த தேர்தல் ஒன்றில் பங்களாதேஷ்யை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுவிட்டனர் அப்பொழுது அங்குள்ள மக்கள் அன்னியர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ஊடுருவிய அன்னியர் தான் காரணம் என்று போராட்டத்தில் குதித்தார்கள்.

அதன் அடிப்படையில் இந்த கணக்கெடுக்கும் திட்டம் உருவானது. அசாம் மாநிலத்துக்கு அவசியம் இருக்கிறது என்றாலும் அது தேசிய அளவில் கொண்டுவரப்பட்ட திட்டம் அது. அதனடிப்படையில் தேசிய அளவில் பேசப்படுகிறது அதேநேரம் தமிழகத்திற்கு அது அவசியமில்லை. என்.பி.ஆர்யை எதோ பெரிய தவறு போல் சித்தரிக்கபார்க்கிறார்கள். அதுக்கு இங்குள்ள எதிர்கட்சிகள் உடந்தையாக இருக்கிறார்கள்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here