திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா 11ம் நாள் நள்ளிரவு தெப்ப உற்சவம் !

0
91
thiruchendur murugan

திருச்செந்தூர், மார்ச் 10

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா 11ம் நாள் நள்ளிரவு தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி தெய்வானையுடன் காட்சியளித்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி உற்சவ திருவிழா கடந்த 28ம் தேதி துவங்கியது. இத்திருவிழா நாட்களில் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை தனித்தனி சப்பரத்தில் வீதி உலா நடந்தது. இத்திருவிழா 11ம் நாளான நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி தெய்வானையுடன் தெப்பகுளத்தில் உள்ள நகரத்தார் மண்டத்தை சேர்ந்தார்.

அங்கு உபயதாரர் சார்பில் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. பின்னர் தெப்பத்தில் மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி, அம்பாளுடன் எழுந்தருளினார். பின்னர் தெப்பத்தில் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன் மற்றும் செயல் அலுவலர் அம்ரித் ஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here