கோவில்பட்டி JCI சார்பாக பெண்கள் தின கொண்டாட்டம் “தங்க மங்கை 2020 “ எனும் பெயரில் கோவில்பட்டி கம்மவர் டிரஸ்ட் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .விழாவில் 400 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களும், பார்வையாளர்களும் கலந்து கொண்டனர் . விழாவில் பெண்கள் சுயதொழில் மற்றும் முன்னேற்றம் சார்த்த அரங்குகளும் ,மாதிரி முன்னோட்டம்(DEMO) செய்து காட்டபட்டது.

பெண்களுக்கான பல்வேறு போட்டிகளும் நடைபெறுகின்றன. மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. JCI கோவில்பட்டியின் JCRT தலைவர் Jcrt.வித்யாலக்ஷ்மி முரளி கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார் . ப்ராணிக் ஹீலிங் கோவில்பட்டி அமைப்பளர் சிவ பாலா தலைமை ஏற்று தங்கமங்கை வெற்றியாளர்க்கும், மற்ற வெற்றியாளர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்த லா தர்ஷினி தங்கமங்கை பட்டத்தினை வென்றார். ஏற்பாடுகளை கோவில்பட்டி JCI கிளை உறுப்பினர்களும் முன்னாள் தலைவர்களும் ,கவுரவ ஆலோசர்களும் செய்து இருந்தார்கள்.
விழாவினை Jcrt மகளிரணி குழு உறுப்பினர்கள் சிறப்பாக நடத்தி இருந்தார்கள்.