கடம்பூர் – மணியாச்சி இடையே இரட்டை வழிப்பாதை சோதனை ஓட்டம் !

0
268
railway kadambur - maniyachi

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் ரயில் நிலையம் முதல் தட்டப்பாறை, மணியாச்சி வரை 35 கி.மீ. தூரம் இரட்டை வழிப் பாதை பணிகள் மின் மயமாக்கப்பட்டு பணிகள்முடிவடைந்திருக்கிறது. இந்தநிலையில் கடம்பூரில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே ஸ்டேஷன் கட்டிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் மனோகர் தலைமையில் கோட்ட மேலாளர் லெனின் முன்னிலையில் திறக்கப்பட்டது.

அதன் பின்னர் நவீனமாக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது ரெயில்வே வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. 35 கி.மீ தூரம் பணி முடிந்திருக்கும் கடம்பூரி – மணியாச்சி இடையிலான இரட்டை பாதையில் முதற்கட்டமாக கடம்பூரிலிருந்து 11 கி.மீ. தூரம் மணியாச்சி வரை டிராலி சோதனை ரயில் ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது.. இந்த சோதனை ஒட்டம் திருப்தியாக முடிந்ததால் இன்று இரட்டை பாதையில் விரைவு ரயில் மூலம் சோதனை ரயில் ஓட்டம் நடத்தப்பட இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here