விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிகளுக்கு தடை – தமிழக கல்வித்துறை அறிவிப்பு

0
31
education

பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துவது வழக்கம். இதில், தனியார் பள்ளிகள் மிகுந்த அக்கறை எடுத்து நடத்தி வருகின்றனர். பண்டிகை காலங்களிலும் இதுபோன்ற சிறப்பு வகுப்புகள் எடுப்பதாக புகார் எழுந்தது.

தற்போது நேற்று 14ம் தேதிமுதல் 16ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த காலங்களில் சித்திரை 1ம் தேதி தமிழ் புத்தாண்டு பிறப்பு, கிறிஸ்தவர்களின் பெரிய வியாழன், பெரிய வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை நடைபெறுகிறது. இந்த விடுமுறை நாட்களிலும் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுவதாக புகார் கிளம்பியது.

இந்தநிலையில் தமிழ்நாடு கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு சுற்றறிக்கை வந்தது. அதன்படி முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பட்டுள்ளது. அதில், ‘விடுமுறை காலங்களில் எக்காரணம் கொண்டும் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here