ஒரு காலத்து சினிமாக்களில் இந்து மத சாஸ்திரம், சம்பிரதாயம் எல்லாம் அப்படியே பார்க்க முடிந்தது. இடையில் பகுத்தறிவு பேசுபவர்களின் விளம்பரத்தால் அதில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது. இப்போது மீண்டும் பழையபடி இந்து மத சாஸ்திரம்,சம்பிரதாயம் எல்லாம் சினிமாக்களில் வர இருப்பதாக சொல்கிறார்கள்.
பழைய கருப்பு வெள்ளை படங்களில் அக்காலத்து மந்திரம் சார்ந்த இசைகளும், மாய ஜாலங்களும் இடம்பெற்றன. அது அப்போது சாதாரணமாக பார்க்கப்பட்டது. மற்றபடி அது விநோதமாகவோ, விபரீதமாகவோ பார்க்கப்படவில்லை. ஆனால், சினிமாக்குள் எப்போது அரசியல நுழைந்ததோ அன்றிலிருந்து. மூட நம்பிக்கை என்கிற பெயரில் கண்டிப்பு, கலாய்ப்பு என்றாகி சடங்குகளையும் சாஸ்திரங்களையும் சொல்வதே தவறு என்பதுபோல் ஆகிவிட்டது.
அதனால் அப்பட்டிபட்ட படங்களை நீண்ட காலமாக பார்க்க முடிவைல்லை. அதிலும், புரட்சி என்கிற பெயரில் அத்துமீறும் சமூக சீர்த்தபடங்கள் சமீபகாலமாக சினிமாத்துறையை துழைத்தெடுத்து வருகின்றன. சில படங்கள் விமர்சனத்துக்குள்ளானாலும், அதையே சினிமா வெற்றிக்கு பயன்படுத்தும் போக்கும் நடைபெற்று வந்தன.
இந்தநிலையில் தற்போது பழைய சாஸ்திரம், சம்பிரதாயங்கள் அடங்கிய நிகழ்வுகளை பிரம்மாண்டமாக காட்டும் படங்கள் வரதொடங்கியிருக்கின்றன. இந்த படங்கள் ஏகபோக ஆதரவு பெற்று கோடிக்கணக்கில் வசூல் வேட்டையாடி வருகிறது. இதனால் பகுத்தறிவு பேசும் புரட்சியாளர்கள் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.
எனவே இந்து மத சடங்குகள், சாஸ்திரங்கள் அடங்கிய குடும்ப சினிமா படங்கள் இனிமேல் நிறைய வரும் என்கிறார்கள் சினிமா வட்டாரங்கள்.