பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்ட 8 பேர்களுக்கு ஒரு லட்சம் நிவாரணம் – தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி வழங்கினார்

0
91

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்ட 8 பேருக்கு சுமார் 1 லட்சம் நிவாரணத் தொகைக்கான வங்கி வரைவோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் உட்பட 8 பேருக்கு ரூபாய் 1,05,000-ம் வழங்கப்பட்டுள்ளது.

அதில் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 31.07.2017 அன்று தர்மராஜ் மாணிக்கம் என்பவர் கொலை செய்யப்பட்டார். அவரது வாரிசுக்கு ரூபாய் 20,000-ம் உட்பட பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் உட்பட புகார் தாரர் மற்றும் வாரிசுதாரர்கள் சோலையப்பன், வெள்ளைச்சாமி மற்றும பம்பையன் ஆகியோருக்கு பாதிக்கப்பட்டவருக்கான உதவி தொகைக்கான வங்கி வரைவோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here