பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி – 36 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்

0
153
minister senkottaiyan news

தமிழக அமைச்சர்களில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவ்வப்போது புதிய அறிவிப்புகளை அறிவித்துக் கொண்டே இருக்கிறார். நேற்று (12.03.2020)நடந்த பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. இதில் பதில் அளித்து பேசிய அமைச்சர் 36 அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு :

1) 1,575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக ஆண்டு ஒன்றிற்கு 1.11 கோடி கூடுதல் செலவில் தரம் உயர்த்தப்படும்.

2) பள்ளி மாணவர்களிடையே உள்ள திறமைகளை பிறருடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் 6 முதல் 8-ம் வகுப்புவரை மாணவர்களின் நலனுக்காக 82.34 லட்சம் செலவில் பள்ளி பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

3) அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஆண்டு ஒன்றுக்கு 12.84 கோடி செலவில் தோற்றுவிக்கப்படும்.

4) சிறைவாசிகளுக்காக சமநிலை கல்வி திட்டம் 20.35 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படும்.

5) வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறும் மாவட்டங்களில் வயதுவந்த கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குவதுடன் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்திட ஏதுவாக தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கப்படும்.

6) பொதுத் தேர்வுகளுக்கு தரம் மேம்படுத்தப்பட்ட புதிய மதிப்பெண் சான்றிதழ்கள் 13.50 கோடி செலவில் வழங்கப்படும்.

7) செயல் வழி பயன்பாட்டு கற்றல் மற்றும் புதுமை மையங்கள் 2 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

8) அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் வளர்ச்சியினை ஊக்குவித்தல் என்ற திட்டம் ரூபாய் 2 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

9) சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒலிவடிவில் பாடநூல்கள் ரூபாய் 30 லட்சம் செலவில் தயாரித்து வழங்கப்படும்.

10) மாணவர்களின் திறனை வெளிக்கொணரும் அதற்கு ஏற்றவாறு வினாத்தாள் தயாரிப்பதற்கான ரூபாய் 39.41 லட்சம் செலவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

11) மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூபாய் 4.93 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

12) மாணவர்களின் படைப்பாற்றல் கலை உணர்வு தனித்திறமைகளை மிளிரச் செய்யும் வகையில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வண்ணத்திருவிழா ரூபாய் ஐந்து லட்சம் செலவில் நடத்தப்படும்.

13) அரசு பள்ளிகளில் 2 மற்றும் 3ம் வகுப்பு களில் பயிலும் கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு குறைதீர் கற்றல் பயிற்சி புத்தகம் ரூபாய் ஒரு கோடியே 65 ஆயிரம் செலவில் வழங்கப்படும்.

14) சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் கல்வி அறிவையும் அவர்களது உடல் மற்றும் மன வலிமையையும் மேம்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் உடல் இயக்க வல்லுனர்களுக்கு புத்தாக்க பயிற்சி ரூபாய் 19.76 லட்சம் செலவில் வழங்கப்படும்.

15) சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான பயிற்சியை மேம்படுத்த நவீன கற்றல் மற்றும் உடலியக்க உபகரணங்கள் ரூபாய் 82.20 லட்சம் செலவில் வழங்கப்படும்.

16) டிபிஐ வளாகத்தில் ரூபாய் ஒன்பது லட்சம் செலவில் நூலகம் அமைக்கப்படும்.

17) 120 மாதிரி பள்ளிகளில் நூல்கள் வார இதழ்கள் மற்றும் நான்கு இதழ்கள் கொண்ட தகவல் களஞ்சியங்கள் ரூபாய் முப்பது லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

18) அனைத்து நூலகங்களிலும் குடும்ப நூலக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

19) அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே வாசிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் நூலகத்தை அதிகநேரம் பயன்படுத்திய மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் ரூபாய் ஒன்றரை லட்சம் செலவில் வழங்கப்படும்.

20) மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஆசிரியருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் ரூபாய் இரண்டரை லட்சம் செலவில் வழங்கப்படும்.

21) குடியிருப்பு வளாகங்களில் சமுதாய நூலகம் அமைக்கப்படும்.

22) சென்னை அண்ணாநகர் கிழக்கு நூலகத்திற்கு புதிதாக இணைப்புக் கட்டடம் ரூபாய் 75 லட்சம் செலவில் கட்டப்படும்.

23) வாசகர் பயன்பாடு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 17 நூலகத் கட்டிடங்கள் ரூபாய் ஒரு கோடி செலவில் புனரமைக்கப்படும்.

24) மத்திய மற்றும் மாநில அரசின் விருது பெற்ற தமிழ் நூல்கள் நூலகங்களுக்கு வாங்கும் திட்டம் 60 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

25) இயற்கை எய்திய நூலக பணியாளர்களின் நூல் இறப்பிற்கான அபராத தொகை ரத்து செய்யப்படும்.

27) மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககம் என பெயர் மாற்றம் செய்யப்படும்.

28) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர்களின் பெயருடன் பெற்றோர்களின் பெயர்களை அச்சிட்டு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

29) மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளையும் தனித்துவமான கலை திறன்களையும் வளர்க்கும் வண்ணம் கலை இலக்கிய போட்டிகள் மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்க திணை ஊக்குவித்து இட பாரம்பரிய உணவு திருவிழா ஆகும் ரூபாய் 5 கோடி செலவில் நடத்தப்படும்.

30) மன திறன் தேர்வு மற்றும் படிப்பறிவு திறன் தேர்வுக்கான மாதிரி வினாவிடை கையேடு வழங்கும் திட்டம் ரூபாய் 20 புள்ளி எட்டு லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

31) மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்வதற்கும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் ஏற்ப மேல்நிலைப்பள்ளிகளில் மூன்று அல்லது நான்கு முதன்மை பாடங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் விதமாக பாடத் தொகுப்புகள் மேம்படுத்தப்படும்.

32) அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கும் திட்டம் ரூபாய் 27 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

33) ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகளை நடத்திடும் நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் ரூபாய் 70 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

34) ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் பணி நாடினார்கள் பயன்பெறும் வகையில் தகவல் மையங்கள் ரூபாய் 10 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

35) அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்லும்போது அரசு அருங்காட்சியங்களைப் பார்வையிட பெரிதும் ஊக்குவிக்கப் படுவார்கள்.

36) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் கணினி வழி தேர்வுகளை வலுப்படுத்திட ஐஐடி எம் ஐ டி போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here