எதிர்க்கட்சிகளின் அவதூறு பிரச்சாரங்களால் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது – சட்டசபையில் முதல்வர் வருத்தம்

0
92
cm edappadi palanichami

சட்டசபையில் திமுக உறுப்பினர் பொன்மோடிக்கு பதில் அளிக்கும் போது வருத்ததுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

தமிழக சட்டசபையில் நேற்று(12.03.2020) பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வித் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தில் திமுக உறுப்பினர் பொன்முடி மாநில கல்வி உரிமை மற்றும் 5ம் வகுப்பு எட்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஆகியவை குறித்து பேசினார்.

இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வி தொடர்பான எங்களது கொள்கை தெளிவானது எம்ஜிஆர் ஜெயலலிதா வகுத்து தந்த இரு மொழிக் கொள்கையில் முதல்வரும் உறுதியாக உள்ளார் நாங்கள் தைரியம் துணிவோடு தான் இருந்து கொண்டிருக்கிறோம் என்றார்.

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறுக்கிட்டு, ”ஐந்தாம் வகுப்பு 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்தது மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு தான் அவர்கள் தேர்வை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காகத்தான்.

மாணவர்களின் தரம் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு தெரியாது தேர்வின் மூலம் தான் அவர்களின் தரத்தை அறிந்து கொள்ள முடியும் மாணவர்களின் தரம் பற்றி அறிந்துகொண்டால்தான் அவர்களுக்கு நல்ல கல்வி வழங்க முடியும் 8-ம் வகுப்பு தேர்வை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ப கல்வி வழங்கினால்தான் அவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வை நல்ல முறையில் எழுதி உயர்கல்விக்கு செல்ல முடியும். 5-ம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது அனைவரின் கோரிக்கையை ஏற்றுதான்.

அதற்கு நீங்கள் காரணமல்ல ஐந்தாம் வகுப்புக்கு தேர்வு நடத்தினால் என்ன தவறு தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டது நீங்கள்தான் அவதூறு பிரச்சாரங்கள் மேற்கொள்வீர்கள் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு தேர்வை மாணவர்கள் எழுதும் போது தான் அவர்களுக்கு தேர்வு பற்றிய பதட்டம் போகும் பத்தாம் வகுப்பு தேர்வை பதட்டமில்லாமல் எழுத முடியும் அதற்காகத்தான் அந்த அறிவிப்பை கொடுத்தோம்.

இன்றைய காலகட்டம் வேறு அன்றைய கால கட்டம் வேறு இது விஞ்ஞான உலகம் இத்தகைய தேர்வுகளை எழுதினால்தான் மாணவர்கள் போட்டி போடமுடியும் அறிவுப்பூர்வமாக மாணவர்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் ஜெயலலிதா மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். உலகத்தரத்திற்கு கல்வி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கிராமபுர மாணவர்கள் நன்றாக இருக்கவேண்டும் நகரில் வசிக்கும் மாணவர்களைப் போல தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கிராமப்புற மாணவர்கள் நன்றாக இருக்கவேண்டும் நகரில் வசிக்கும் மாணவர்களை போல் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களோடு போட்டி போடமுடியும் நகர்ப்புற மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கு எழுதி இடத்தை தக்கவைத்துக் கொள்கிறார்கள். கிராமப்புற மாணவர்களுக்கு நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக போட்டித் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் அதற்கு மாணவர்களின் தரத்தை தேர்வு மூலம் தான் அறிந்து கொள்ள முடியும்.

நல்ல கல்வி அறிவு கிடைத்தால்தான் கூடுதல் மதிப்பெண்கள் பெற முடியும் அச்சமின்றி தேர்வு எழுதி நகர்ப்புற மாணவர்களுக்கு ஈடுகொடுக்க முடியும். கல்வி அமைச்சர் கூட அந்த தேர்வுகளில் யாரும் பெயில் ஆக்கப்பட மாட்டார்கள் என்று உறுதி அளித்து இருந்தார்’’ இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருத்தத்துடன் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here