தமிழகத்தை சேர்ந்த ஒருவரை முதல்வர் வேட்பாளராக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தால் அதை நாங்கள் முழுமையாக ஆதரிப்போம் என்று தூத்துக்குடியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் நடந்த சி ஏ ஏ, என் ஆர் சி, என் பி ஆர் க்கு எதிராக நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’தமிழக வருவாய்த்துறை அமைச்சர் தமிழகத்தில் கணக்கெடுப்பு கணக்கெடுக்கும் பணி நடக்காது என தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக சட்டமன்றத்தில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். மேலும் தமிழகத்தை தமிழன் ஆள வேண்டும் என்ற எங்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற ரஜினிகாந்த் கருத்தை வரவேற்கிறோம்.
நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தை சேர்ந்த ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் அதை நாங்கள் முழுமையாக ஆதரிப்போம்’’ என்றார் வேல்முருகன்.