தூத்துக்குடியில் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி – என்.பி.ஜெகன் தொடங்கி வைத்தார் !

0
324
thoothukudi DMK

தூத்துக்குடியில் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது. அந்த விளையாட்டு போட்டியை கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் திமுக தலைவர் ஸ்டாலின் 67-வது பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டிக்கு இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் தலைமை வகித்தார். கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் பெரியசாமி விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார்.

மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம் இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், மாணவரணி துணை அமைப்பாளர் பாலகுருசாமி மாநகர துணை செயலாளர் கீதா முருகேசன், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் அருண் சுந்தர், தொண்டரணி அமைப்பாளர் ராமர் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், மேலும் நிர்வாகிகள் முத்துதுரை, பிரபாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here