தென் தமிழகத்தில் திருநெல்வேலி என்றாலே உடனே நினைவுக்கு வருவது நெல்லைப்பர் திருக்கோயில்தான். அந்த கோயிலில் கொரோனா பிரச்னை காரணமாக நடைபெறாமல் இருந்த வருஷாபிசேகம் மற்றும் விழாக்கள் நடைபெற உள்ளது.

இது குறித்து கோயிலின் கூடுதல் பொறுப்பு செயல் அலுவலர் சுவ.சுந்தரேசன் வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த திருநெல்வேலி அருள் மிகு நெல்லையப்பர் அருள் மிகு காந்திமதி அம்மன் திருக்கோயில் வருஷாசேக திருவிழா நாளை 12ம் தேதி நடக்கிறது.
காலை 9.00மணிக்கு மேல் 10.30 மணிக்குள்ளாக கலச அபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மாலை 6.00 மணியளவில் சுவாமி மற்றும் அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் திருநெல்வேலி நகரின் நான்கு இரத வீதிகளிலும் திருவீதி உலா பவனி நடைபெறவுள்ளது’’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.