தயிர் சோறு, புளியோதரை திங்கின்ற உனக்கே இவ்வளவு கொழுப்பு இருந்தா மாட்டுக்கறி, ஆட்டுக்கறி சாப்பிடுகின்ற எங்களுக்கு எவ்வளவு இருக்கும் – தூத்துக்குடியில் வேல்முருகன்

0
78
thoothukudi caa meeting

தயிர் சோறு, புளியோதரை திங்கின்ற உனக்கே இவ்வளவு கொழுப்பு இருந்தா மாட்டுக்கறி,ஆட்டுக்கறி,நெஞ்சி, நல்லி எலும்பு,தலைக்கறி எல்லாம் கொழுப்பையை உணவாக சாப்பிடுகின்ற எங்களுக்கு எவ்வளவு இருக்கும் என தூத்துக்குடியில் (13.03.2020) குடியுரிமை சட்டதிருத்ததிற்கு எதிராக நடந்த பொதுக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இவ்வாறுபேசினார்.

தூத்துக்குடி மாநகர ஜமாத்துல் உலமா தலைமையில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் வக்பு வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி,ஹென்றி தீபன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேசுகையில், ’’தொடர்ந்து கடந்த இரண்டு மாதம் காலத்திற்கு மேலாக தமிழகம் முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் ஜனநாயக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன ஏன் எதற்கு முன்னெடுக்கப்படுகின்றன என்று தமிழக முதல்வரோ அல்லது தற்போது நடைபெற்று இருக்கக்கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரோ கவலைப்படவில்லை.

இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுத்துவது இல்லை. இந்திய துணைக்கண்டம் முழுதும் வாழக்கூடிய 130கோடி மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு மோசமான கருப்பு சட்டம் என்று நாடாளுமன்றத்தினுடைய மையமன்றத்தில் இன்றைக்கு விவாதித்து உள்ளனர்.

ஆனால் இது தொடர்பாக மத்திய உள்த்துறை அமைச்சரோ பிரமதர் மோடியோ இதுகுறித்து வாய்த்திறக்க மறுத்து நேற்று உள்த்துறை அமைச்சர் அமித்ஷா என்பியார்காக எந்த ஆவனங்களும் கேட்க்கப்படாது என்றார். குடியுரிமையை சட்டத்தில் பின்வாங்கமாட்டோம் என்று சொன்ன உள்த்துறை அமைச்சர் புதியதாக நாங்கள் கேட்ட ஆவனங்களை கோரப்போவது இல்லை என்று தெரிவித்து இருக்கின்றார். இதுவே இஸ்லாமிய மக்களுக்கு முதல் வெற்றி.

மேலும் நாங்கள் எல்லா பிரச்சினைகளையும் சந்தித்துள்ளோம் ஆளானப்பட்ட கலைஞர்,ஜெயலலிதா,காங்கிரஸ், பிஜேபி காட்சியில் இருந்து எல்லோரையும் பார்த்து வளர்ந்து 35ஆண்டு காலம் அரசியல் அனுபவம் பெற்று 6முறை சட்டப்பேரவை தேர்தலில் நின்று இரண்டுமுறை வெற்றிபெற்று தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் பொறுப்புகளிலும் அரசின் உடைய சட்டப்பேரவை குழுக்கள் எத்தனை குழுக்கள் உள்ளதோ அத்தனை குழுக்களிலும் தலைவராக இருந்து பனியாற்றி உள்ளேன்.

என்னுடைய வரலாறு தெரிய வேண்டும் என்றால் மாவட்ட மூத்த பத்திரிக்கையாளர்கள் அல்லது ஒருநாள் சி எம் என்று இணையத்தில் போய் பாருங்கள் அப்போது தெரியும் இந்த நாட்டின் கலெக்டர், எஸ்பி,டி ஆர் ஓ,டிஜிபி,என எத்தனை பேரை சஸ்பண்ட் செய்து வீட்டுக்கு அனுப்பி உள்ளேன் என்று.

வாய் அடிக்கி அரசியல் கத்துக்கோங்க தூத்துக்குடி,மதுரை டெல்லியாக மாறும் என்று மைலாப்பூரில் இருந்து வாய்ச் சவடால் செய்யாமல் உங்கள் வேலையை பாருங்கள் நாங்கள் உங்கள் அப்பனை பாத்தவர்கள்.

தயிர் சோறு, புளியோதரை, திங்கின்ற உனக்கே இவ்வளவு கொழுப்பு இருந்தா மாட்டுக்கறி,ஆட்டுக்கறி,நெஞ்சி நல்லி எலும்பு,தலைக்கறி எல்லாம் கொழுப்பையே உணவாக சாப்பிடுகின்ற எங்களுக்கு எவ்வளவு இருக்கும்’’என்றவர், ’’சுதந்திர கொடி முதல், கோட்டை,,கதர் கதலி,கதர் வேஸ்டி வடிவமைத்தது எல்லாம் இஸ்லாமியர்கள் அனைத்தும் எங்களது’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here