வரும் 16ம் தேதி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் – புதியதமிழகம் கட்சியினர் முடிவு

0
12
puthiya thamizagam

சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியான நியூஸ் 18ன் விவாத மேடை நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு ‘திராவிடம் திசை மாறி ஒரு குடும்பத்திற்குள்…’ என்று பேசிய கருத்தை எதிர்கொள்ள முடியாமல் அருவருக்கதக்க வகையில் நடந்துகொண்ட ஒங்கேல் திமுகவின் ரவுடிகளை கண்டித்து மாநிலம் முழுவதும் புதிய தமிழகம் கட்சி மற்றும் தேவேந்திரகுல வேளாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், திண்டுக்கல்லில் திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியற்காக புதிய தமிழகம் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் சிவநாத பாண்டியன் ஆகியோர் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர். அதோடு 32பேர் மீது போலீசார் பொய் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

போலீசாரின் அராஜக செயலைக் கண்டித்தும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்திட வலியுறுத்தியும் வரும் 16.05.2022(திங்கட்கிழமை) அன்று புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தலைமையில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது.

இந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பது தொடர்பான தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி கனி ஹோட்டலில் இன்று(12.05.2022) நடைபெற்றது.

கூட்டத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி செயலாளர் வழக்கறிஞர் பி.கனகராஜ் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் கிருபைராஜ், மாநில நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கரு.ராஜசேகரன், மாநில மகளிரணி பொறுப்பாளர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச்செயலாளர் அதிக்குமார் குடும்பர் வரவேற்றார்.

கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி செயலாளர் வழக்கறிஞர் பி.கனகராஜ் பேசியதாவது, நமது கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் ஜாதி, மத, இன பேதமின்றி அனைத்து தரப்பு மக்களையும் சகோதரர்களாக அரவணைத்து சென்று வருகிறார்.

சமுதாயத்திலுள்ள அனைத்துதரப்பு மக்களின் நலனுக்காகவும் முதல் ஆளாக குரல் கொடுக்கும் சமுதாய நல்லிணக்க தலைவராக அவர் செயல்பட்டு வருகிறார். இப்படிப்பட்டச்சூழலில் அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் இதுபோன்ற தேவையில்லாத செயல்களை செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.

இந்நிலையில், உரிமைக்காக உயிரையும் கொடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் புதிய தமிழகம் கட்சி தொண்டர்களான நம்மை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வரும் ஆளும் கட்சியான திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஒரே காரணத்திற்காக ஆளும் திமுக அரசின் தூண்டுதலின் பேரில் போலீசார் புதிய தமிழகம் கட்சி மாநில நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், 32பேர் மீது போலீசார் பொய் வழக்கும் பதிவும் செய்துள்ளனர்.

காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக ஆர்ப்பாட்டம் நடத்திய காரணத்திற்காக நமது கட்சியின் மாநில நிர்வாகிகள் விஜயகுமார், சிவநாத பாண்டியன் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

திட்டமிட்டே பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டுள்ள புதிய தமிழகம் கட்சி மாநில நிர்வாகிகள் விஜயகுமார், சிவநாத பாண்டியன் ஆகிய இருவரையும் உடனடியாக விடுதலை செய்திடக்கோரியும், போலீசார் போட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெறவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வரும் 16ம் தேதி நமது தலைவர் தலைமையில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் மாபெரும் போராட்டம் நடக்கிறது.

இப்போராட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் திண்டுக்கல்லுக்கு அணி திரண்டு சென்று போராட்டத்தில் பங்கேற்றிட இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, நமது மாவட்டத்திலுள்ள கட்சியின் மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூராட்சி உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள், தேவேந்திரகுல வேளாளர்கள் சங்கத்தினர் அனைவரும் தவறாமல் அணி அணியாக திரண்டு வந்து பங்கேற்று நம் எதிர்ப்பினை பதிவு செய்து, ஆளும் திமுக அரசுக்கு தகுந்த பாடம் புகட்டிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

அதனைத்தொடர்ந்து, கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகளை மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்திடக்கோரி மாவட்டத்திலுள்ள புதிய தமிழகம் கட்சி மற்றும் தேவேந்திரகுல வேளாளர்கள் சங்கத்தினர் அனைவரது வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றுவது, கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்திற்கு மாவட்டத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணி திரண்டு செல்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர்கள் பெருமாள், புதூர்செல்வம், கடற்கரை, பெத்துராஜ், குருவை சதீஷ்குமார், பொன்அமிர்தம், மாநில மகளிரணி நிர்வாகிகள் பிரேமா, இந்திரா,

ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி செந்தூர்பாண்டியன், கோவில்பட்டி சண்முகநாதன்(மேற்கு), ஓட்டப்பிடாரம் ஜேசிபி முருகன்(மேற்கு), மனோகரன்(கிழக்கு), அய்யர்பட்டி முருகேசன்(வடக்கு), விளாத்திக்குளம் உமையனன்(கிழக்கு), குளத்தூர்பெருமாள்(தெற்கு), முருகேசன்(வடக்கு), கருங்குளம் சின்னத்துரை, கயத்தார் ரவி(கிழக்கு), சக்கரவர்த்தி(மேற்கு), பேச்சிமுத்து(மத்தி), ஆழ்வை கேசவன்(கிழக்கு), ராஜா(மேற்கு), ஸ்ரீவை ராஜா,

கருங்குளம் இளைஞரணி அழகர்சாமி, தொகுதி செயலாளர்கள் விளாத்திக்குளம் பெருமாள், ஓட்டப்பிடாரம் பெருமாள், மாநகர துணை செயலாளர் துரை, மாநகர இளைஞரணி செயலாளர் மாரியப்பன், மாநகர மீனவரணி செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ரமேஷ் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here