குலையன்கரிசல் அருகே எரிவாயு குழாய் செல்லும் ரோட்டில் பள்ளம் – அச்சத்தில் வாகன ஓட்டிகள்

0
13
kulaiyankarisal

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், குலையன்கரிசல் சுற்றுவட்டார பகுதியில் நிறைய விளைநிலங்கள் இருக்கிறது. தற்போது வாழைத்தார் அறுவடை நடைபெற்று வருகிறது. எனவே 407, குட்டியானை உள்ளிட்ட சிறிய வாகனங்கள் முதல் லாரி உள்ளிட்ட பெரிய வாகனங்கள் வரை வாழைக்காய் லோடு ஏற்றுவதற்காக அப்பகுதிக்கு வந்து செல்கின்றன.

அதிலும் குலையன்கரிசல், பாண்டியாபுரம், ரத்தினபுரி வழியாக சிறுப்பாடு – அத்திமரப்பட்டி ரோட்டிற்கு செல்லும் இணைப்பு சாலையில் நிறைய வாகனங்கள் வந்து செல்கின்றன. தற்போதைய நிலையில் மிகவும் முக்கியம் வாய்ந்த அந்த சாலையில் ரத்தினாபுரிக்கும் சற்று வடக்கு பகுதியில் திடீர் பள்ளம் விழுந்திருக்கிறது. அது, அந்த வழியாக கொண்டு செல்லப்படும் எரிவாய் குழாய் பதிப்பதற்காக தோண்டிய பள்ளம் என்கிறார்கள். அந்த பள்ளத்தில் வாகனங்கள் இறங்கி, ஏறுவதில் பெரும் சிரம் ஏற்படுகிறது. மேலும் அது, எரிவாயு குழாய் பதிக்கப்பட்ட பகுதி என்பதால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் எரிவாயு சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை என்கிறார்கள்.

எனவே விபரீதத்தை தவிர்க்க, சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் உடனே அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here