பழையகாயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு புகார் – தலைவர், துணைத்தலைவர் சஸ்பெண்ட்

0
14
suspended

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகாவில் உள்ள பழையகாயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு புகார் எழுந்தது. ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய கவுன்சிலர் தனேஸ் புகார் கூறிவந்தார். சங்கத்தில் நகைக்கடன், பயிர்க்கடன் வழங்கல் மற்றும் தள்ளுபடி செய்ததில் முறைகேடு நடந்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார். மாவட்ட, மாநில அளவிலான அதிகாரிகள் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இந்த தகவல் அடிப்படையில் பல்வேறு அரசியல் அமைப்புகளும் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இந்தநிலையில் புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று 12ம் தேதி தூத்துக்குடி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார்.

அதில், ’’நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் வழங்கியதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாததை கண்காணிக்க தவறியது மற்றும் தவறான நிர்வாக நடவடிக்கைக்காக பழையகாயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் வே.ஜெயசங்கர் மற்றும் துணைத்தலைவர் பா.விஜயசங்கர் ஆகியோரை தற்காலிக பதவி நீக்கம் செய்திட தூத்துக்குடி சரக துணைப்பதிவாளர் பரிந்துரைத்துள்ளார். அதன்படி இருவரும் 12.052022 முதல் 11.11.2022 முடிய ஆறு மாதங்களுக்கு தற்காலிக பதவி நீக்கம் செய்யப்படுகிறார்கள்’’ என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here