தமிழகத்தில் கொரொன தாக்குதல் பெரிய அளவில் இல்லை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி (கேள்வியும் பதிலும்)

0
59
edappadi palanichami

தமிழகத்தில் கொரொன தாக்குதல் பெரிய அளவில் இல்லை என்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவதற்கு திண்டுக்கல் வந்த முதல்வர் எடப்பாடி பழினிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அவரிடம் செய்தியாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதிலும் கீழே.

கேள்வி : கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதே. தமிழக அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது ?

முதல்வர் : நேற்றையதினம் சுகாதாரத்துறை அமைச்சர், உயர் அதிகாரிகள் இணைந்த ஆலோசனை நடந்திருக்கிறது. அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஒரு அறிக்கை தயாரித்து தாக்கல் செய்ய இருக்கிறோம்.

கேள்வி : அதிமுக கூட்டணியில் உள்ள பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் நாடு முழுவதும் கொரொனா வைரஸ் பிரச்னை இருப்பதால் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களை மூடிவிட அரசு உத்தரவிட வேண்டும் என கேட்டிருக்கிறாரே?

முதல்வர் : அந்த அளவிற்கு தமிழகத்தில் பாதிப்பில்லை.

கேள்வி : அரசியலில் மாற்றம் கொண்டு வரவேண்டும், கட்சிக்கு ஒரு தலமையும் ஆட்சிக்கு ஒரு தலமையும் வேண்டும் என்கிறாரே ரஜினிகாந்த்?

முதல்வர் : அவர் முதல்ல கட்சி ஆரம்பிக்கட்டும் அவர் கட்சியே ஆரம்பிக்க வில்லை அதற்குள் அதுகுறித்து ஏன் விவாதம் நடத்த வேண்டும்?

கேள்வி : பாஜக வில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாநிலத் தலைவர் முருகன், அடுத்த முறையும் இதே கூட்டணி தொடரும். இந்த முறை அதிகமாக சீட்டுகளை கேட்டுப் பெறுவோம். தமிழக சட்டமன்றத்துக்குள் பாஜக உறுப்பினர்கள் அதிகமாக செல்வார்கள் என்கிறாரே ?

முதல்வர் : எல்லாக் கட்சியும் வளரனும் என்றுதான் நினைப்பார்கள். அந்த அடிப்படையில் அவர் அப்படி பேசியிருப்பார்.

கேள்வி : தேர்தலை சந்திப்போம் என்று சொல்லமாட்டேன் தேர்தலை சந்தித்தே ஆகுவேன் என்கிறாரே கமல்?

முதல்வர் : யாரு வேணாம்னு வரலாம், தேர்தலில் போட்டி போடலாம். இது ஜனநாயகநாடு.

கேள்வி : மாற்றம் வேணும் என்று ரஜினி சொல்லும் அதே நேரத்தில் கமலும் இதுபோன்று சொல்கிறாரே ?

முதல்வர் : இவருடைய சக்தி என்னவென்றுதான் நாம் பார்த்து விட்டோமே!

கேள்வி : அமுமுக ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன இனிமேலிருந்து உண்மையான தொண்டர்கள் வர ஆரம்பிப்பார்கள் என்கிறாரே தினகரன் ?

முதல்வர் : அப்பவும் அப்படித்தான் சொன்னாரு. இப்பவும் அப்படித்தான் சொல்றாரு தேர்தலுக்கு பின்னால இந்த கட்சி இருக்குமான்னு மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

கேள்வி : தமிழகத்திலுள்ள சிறுபான்மை மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள் அவர்களது அச்சத்தைப் தமிழக அரசு போக்க வேண்டும் என்கிறார் கவிஞர் வைரமுத்து?

முதல்வர் : நாங்கள் தெளிவாக சட்டமன்றத்தில் பேசியிருக்கிறோம். வருவாய் துறை அமைச்சர் தெளிவாக விளக்கி சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்லாம ஊடகத்திலும் பத்திரிகையிலும் தெளிவா சொல்லி இருக்கிறோம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here