வியாபாரம்,தொழில் செய்பவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் ஒழுங்காக செலுத்த வேண்டும் – நாலுமாவடியில் மோகன் சி.லாசரஸ் வேண்டுகோள்!

0
197
nalumavadi mohanclasaras

நாசரேத்,மார்ச்.15: வியாபாரம் தொழில் செய்பவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் ஓழுங்காக செலுத்த வேண்டுமென நாலுமாவடியில் நடந்த வியாபாரிகளுக்கான ஆசீர்வாத உபவாச ஜெபத்தில் மோகன் சி.லாசரஸ் வேண்டு கோள் விடுத்து பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம்,நாசரேத் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் நாலுமாவடி தேவனுடையக் கூடாரத்தில் வியாபாரம் மற்றும் தொழில் செய்கிறவர்களுக்கான ஆசீர்வாத உபவாச ஜெபம் நடைபெற்றது.இயேசு விடுவிக்கிறார் பாடல்குழுவினர் பாடல்கள் பாடினர்.இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட தொழிலதிபர்களின் சாட்சிகள் இடம் பெற்றது. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் நம்பிக்கையுடைய சிறைகளே அரணுக்குத் திரும்புங்கள், இரட்டிப்பான நன்மையை தருவேன், இன்றைக்கே தருவேன் என்ற வசனத்தின் பேரில் பிரசங்கம் செய்தார்.

மேலும் அவர் பேசும்போது வியாபாரம் தொழில் செய்பவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை சரியான முறையில் கண்டிப்பாக செலுத்த வேண்டும் ராயன் உடையதை ராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்த வேண்டு மென வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் வியாபாhpகள் வாpகளை சரியாக செலுத்த வேண்டுமென் வசனத்தை மேற்கோள்காட்டி அப்பொழுதுதான் கண்டிப்பாக ஆசிர்வாதம் வரும் எனவும்; பேசினார். நிறைவாக நடைபெற்ற பிரார்த்தனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்காக விசே‘ பிரார்த்தனைகள் எடுத்தார்கள்

முடிவில் கலந்து கொண்ட அனைவருக்காகவும் சிறப்பு பிரார்த்தனை ஏறெடுத்தார்.வியாபாரிகளுக்கானஆசீர்வாதமுகாமில் சகோதாp ஜாய்ஸ்லாசரஸ்,உடன் ஊழியர் அப்பாத்துரை உள்ளிட்ட பல்வேறு ஊழியங்களின் ஊழியர்கள்,பாஸ்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக் கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்தி ருந்தனர்.கூட்டத்திற்கு தூத்துக்குடி,திருநெல்வேலி,கன்னியாகுமரி,விருதுநகர்,கோவை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும்,இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் பல்லாயிரக்கணக்கா னோர் குடும்பம், குடும்பமாக கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் அவரவர் ஊர்களுக்கு திரும்பிச் செல்வதற்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் தூத்துக்குடி திருநெல்வேலி நாகர்கோவிலிலிருந்து இயக்கப் பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை குரும்பூர் காவல் துறையினர் ஆய்வாளர் பொறுப்பு தீன்குமார் தலைமையில் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here