போலி சான்றிதழ் விவகாரம் – நாசரேத்தில் அதிமுக பிரமுகர் பெயரில் போஸ்டர்

0
311
nazareth news

நாசரேத், மார்ச்.17: நாசரேத்தில் அதிமுக பிரமுகர் பெயரில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

நாசரேத் பகுதியில் பி.இ., பி.ஏ., சர்ட்டிபிக்கேட் விலைக்கு விற்கப்படுவதாக ஒரு வார இதழில் வந்துள்ளதை சுட்டிக் காட்டி நாசரேத் பேரூராட்சி வாழையடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கண்ணன் பெயரில் ’’போலி சான்றிதழ் வாங்குவதும், விற்பதும் தேச விரோத குற்றமாகும். பொதுமக்கள் இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.

இது நாசரேத் சுற்று வட்டாரபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலி சான்றிதழ் சம்பந்தமாக மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் விரும்புகிறார்கள் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here