கொரொனா வைரஸ் விசயத்தில் அரசு விடுக்கும் வேண்டுகோளை அனைவரும் ஏற்போம் – நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

0
92
corona viras news

எங்கோ எப்படியோ உருவாகிவிட்ட கொடிய வைரஸ் இப்போது உலகையே ஆட்டிப்படைக்கிறது. வாட்ட சாட்டமாக வலம் வந்த நாடுகள் கூட இப்போது செய்வதறியாது தவிக்கிறது. கண்ணுக்கு தெரிந்த எந்த பொருளையும் கையாள்வது எளிது ஆனால் இதுபோன்று கண்ணுக்கு தெரியாமல் எதோ ஒரு வகையில் சிறிய தொடர் ஏற்பட்டுவிட்டாலே பற்றிக் கொள்ளும் அறிய வகை வைரஸால் உலகமே அலறிக் கொண்டிருக்கிறது.

அத்தனை வேலைகளையும் உதறி தள்ளிவிட்டு கொரொனாவை எதிர் கொள்வதே முதல் வேலையாக செயல்பட்டு வருகிறது உலக நாடுகள். இதுவரை உலக அளவில் 230,732 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அதாவது கொரொனா நோயாளிகள். 9,390 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். 86,261 நோயிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.

இதில் இந்தியாவில் 171 பேர் இதுவரை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அதாவது நோயாளிகள். 4 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். 20 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.

எனினும் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே மத்திய மாநில அரசுகள் முழு அக்கறையெடுத்து கண்காணித்து வருகிறது. யாரும் அதிக அளவில் கூடாத வகையில் மக்களை அலர்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவை பொறுத்தவரை கேரளா, மகாராஸ்ட்ரா, டெல்லி, மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட வெளிநாட்டு தொடர்பு அதிகம் உள்ள மாநிலங்களில் பாதிப்பு காணப்படுகிறது. இருந்தாலும் மேற் கொண்டு பரவாமல் இருக்க, அரசுகள் முழுமூச்சா பணியாற்றி வருவதாக அரசு நிர்வாகம் தெரிவித்து வருகிறது.

வருகிற 31-ம் தேதி வரை பெரும்பாலான நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதேபோல் இன்று பேசிய பிரதமர் மோடி, வரும் 22-ம் தேதி ஒரு முழுவதும் பொதுமக்கள் சுய ஊரடங்கு உத்தரவில் இருக்க வேண்டும்.

’அன்றைய தினம் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். பொதுமக்களின் நடமாட்டத்தை குறைப்பதின் மூலம் நோய் பரவுவதை தடுக்க முடியும். அதுபோல் அப்படியொரு வெற்றிடத்தில் நோயை கண்டுபிடிக்கவும் முடியும் கருதுகிறார்கள் என்றே தெரிகிறது.

இந்த சூழ்நிலையில் அரசை ஆதரிப்பவர்களும் சரி அரசை எதிர்ப்பவர்களும் சரி, அரசு குறித்த புகழ்ச்சியோ அல்லது விமர்சனமோ தெரிவிக்கவேண்டாம் என்பது எமது கருத்து. பிரதமர் ஏற்கனவே கேட்டுக் கொண்டதன்படி அரசுக்கு எதாவது யோசனை சொல்வதாக இருந்தால் பொதுமக்கள் தாராளமாக தெரிவிக்கலாம்.

மேலும் மீண்டும் மீண்டும் அரசு கேட்டுக் கொள்வதுபோல், ஒவ்வொரு நபர்களும் அடுத்தவர்களோடு உள்ள தொடர்பில் இடைவெளி வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கூட்டத்தில் முன்டியடித்துக் கொண்டு எதிலும் நிற்காதீர்கள்.

பல கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் என ஆன்மிக ஸ்தலங்களில் கூட்டத்தை நிறுத்தும் அளவிற்கு நிலமை சீரியசாக இருக்கிறது என்பதை பொதுமக்கள் உணரவேண்டும். அரசு சொல்வதை விளையாட்டாகவோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியாகவோ அலட்சியம் செய்ய வேண்டாம். வரும் முன் காப்பதைவிட வந்த பின் காப்பது மீக கடினம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

எனவே அரசு கொடுத்துள்ள வேண்டுகோளை பொதுமக்கள் யாவரும் பின்பற்ற வேண்டும் என நடுநிலை.காம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் – நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here