கொரானாவை கொல்வதற்கே காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை இடைவெளி – ஆதரிப்போம் அழிவை தடுப்போம்

0
94
corona viras news

உலகம் முழுவது மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரானா வைரஸை எப்படியாவது கட்டுப்படித்தியாக வேண்டும். இதுதான் இப்போது உலக நாடுகளின் முதல் வேலை. சீனாவில் உருவாகி இப்போது இத்தாலி, ஈரான் என பல நாடுகளை உலுக்கி வருகிறது. மிக பெரிய ஜனத் தொகையுள்ள நாட்டான இந்தியாவிலும் வெளியிலிருந்து வந்தவர்கள் மூலம் அங்கொன்றும் இங்கொன்றுமாக பரவியிருக்கிறது.

அது மேலும் அதிகரித்து விட கூடாது என்பதில் நமது அரசுகள் நடவடிக்கைகளை விரைந்து செய்து வருகிறது. பொதுமக்கள் கூடும் இடங்களை அலர்ட் செய்வது முடக்கிவிடுவது என்று படிப்படியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு படியாக வரும் 22-ம் தேதி காலை7.00 மணிமுதல் இரவு 9.00 மணி வரை மக்களே தங்களுக்குள் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியில் வராமல் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.

மக்களுக்குள் இடைவெளி வேண்டும் அப்போதுதான் இந்த கொரொனாவை ஒழிக்க முடியும் அத்தகைய இடைவெளிக்கு விடுமுறைநாளானா ஞாயிற்று கிழமை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. பெரும்பாலான மக்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் இருப்பதால் யாருக்கும் இது கஷ்டத்தை கொடுக்காது. அதை ஒருவாய்ப்பாக பயன்படுத்தி இந்த வைரஸை வளரவிடாமல் தடுக்கலாம் என எதிர்பாக்கிறார்கள்.

இடைவெளி கொடுத்தால் அந்த வைரஸ் எப்படி காலியாகிவிடும் என்று பலரும் கேட்கிறார்கள். ’பொதுவாக இந்த வைரஸ், ஒருவர் உடலில் ஒட்டிவிட்டால் அவருக்கு சிகிச்சை கொடுத்தாகவேண்டும் . அது அவர் உடலில் வாழும்.

அந்த வைரஸ் எதாவது பொருளில் ஒட்டிக் கொண்டிருந்து ஒரு உடலில் ஒட்டமுடியாமல் போனால் மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் இறந்து போய்விடுமாம். வைரஸால் தாக்கப்பட்டவர், எந்த பொருளை தொட்டாலும் எத்தனை மனிதனை மிருகத்தை தொட்டாலும் அங்கே தாவுகிறது. திடப்பொருளில் ஒட்டிக் கொண்டிருக்கும் வைரஸ், எதாவது உயிர் உடலில் ஒட்டமுடியாமல் போனால்தான் அப்படி மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் காலியாகிறது.

அதற்காகத்தான் காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நேரம் குறித்திருக்கிறார்கள். அவ்வளவு நேரம் அந்த வைரஸ் பரவுவதற்கு நாம் வாய்ப்பு கொடுக்காமல் விட்டுவிட்டால் அவற்றை அப்படியே கொன்றுவிடலாம் என்பதே அரசின் திட்டம்.

எனவே பொதுமக்கள் அலட்சியம் எதுவும் இல்லாமல் அரசு கேட்டுக் கொண்டிருக்கும் கால நேர இடைவெளியில் நமக்குள் இடம் விட்டு தனித் தனியாக இருப்போம். மேற்கொண்டு சிலர் உடலில் தொற்றிக் கொண்டிருக்கும் வைரஸை மருத்துவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

-நடுநிலை.காம் R.S.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here