


உலகையையே அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ் தாக்கத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள நமது பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்தார். அதனடிப்படையில் விடுமுறை நாளான இன்று(22.03.2020) நாடு முழுவதிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

வைரஸின் அச்சுறுத்தல் அதிகமாகிக் கொண்டே போய்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் அதன் சங்கிலி தொடர்பை கட் செய்யும் விதமாக இந்த மக்கள் ஊரடங்கு நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.காலை 7.00 முதல் இரவு 9.00 மணி வரை என்றிருந்த இந்த ஊரடங்கு தமிழக அரசால் காலை 5.00 மணி என்றாக்கப்பட்டிருக்கிறது.
மற்ற தேசத்தில் உயிர் சேதம் ஏற்படுவதை வழக்கமான செய்தி போல பார்த்துக் கொண்டிருக்கும் நமது மக்கள், இந்தியாவில் கொரானா என்பதையும் அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவ்வளவாக பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையை நாம் பார்க்க முடிந்தது. மாநில அரசு அடிக்கடி வலியுறுத்தி வழிக்கி கொண்டு வந்திருக்கிறது.
என்றாலும் பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்த நிலையில் சிலர் வெளியில் வந்து கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. கிராமங்களில் அதை அதிகம் பார்க்க முடிந்தது. நகர பகுதியில் மூன்று பேர் சேர்ந்து பைக்கில் உலா வரும் வாலிபர்களுக்கென்றே போலீஸார் மெனக்கிட வேண்டியது இருந்ததையும் பார்க்க முடிந்தது.
தூத்துக்குடியில் மக்கள் ஒத்துழைப்புடன் ஊரடங்கு வெற்றி பெற்றது என மாவட்ட கலெக்டர் சந்திப்நந்தூரி பேட்டியளித்தார். கொரானாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவதுறையினர், உள்ளாட்சிதுறையினர், காவல்துறையினர், வருவாய்த்துறையின, செய்திதுறையினர் என அனைவரையும் கலெக்டர் பாராட்டினார்.