‘பினராயி பற்றி அவதூறு: 119 பேர் மீது வழக்கு

0
34

திருவனந்தபுரம்,: கேரள முதல்வர், பினராயி விஜயனை பற்றி, சமூக வலைதளங்களில் அவதுாறாக கருத்து பதிவிட்டதாக, 119 பேருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. சட்டசபையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, முதல்வர் அளித்த பதில் பற்றிய விபரங்கள், சட்டசபை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த மூன்று ஆண்டுகளில், முதல்வரை பற்றி, சமூக வலைதளங்களில் அவதுாறாக கருத்து பதிவிட்டதாக, 119 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 45 பேர், மத்திய – மாநில அரசு ஊழியர்கள். இதில், 12 பேருக்கு எதிராக, துறை ரீதியான விசாரணை நடக்கிறது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here