நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் விழா

0
45
nazareth news

நாசரேத்,மார்ச்.24:நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் டிலைட் மாணவர் உதவித் திட்டம் சார் பில் ஏழை எளிய மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் வழங்கும் விழா கல்லூரிக் கலைய ரங்கில் நடைபெற்றது.

பாடகர் குழுவினர் பாடல் பாடினார்கள்.விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் பிராங் மொpன் ஆரம்பஜெபம் செய்தார்.துணைமுதல்வர் முனைவர் பெரியநாயகம் ஜெயராஜ் வரவேற்று பேசினார்.கல்லூரி முதல்வர் முனைவர் அருள்ராஜ்பொன்னுதுரை தலை மைவகித்து நடைபெற்ற கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள் பற்றியும், மாணவர்கள் இதனை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

ஐடியல் நிறுவனங்களின் நிர்வாகஇயக்குநர் ஞானராஜ் கோயில்பிள்ளை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு துறைக்கு மூன்று மாணவர்கள் வீதம் 40 மாணவர்களுக்கு இத்திட்டத்தின்கீழ் பல்கலைக்கழகத் தேர்வுக்கட்டணம் செலுத் துவதற்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கினார். மேலும் ஆண்டுதோறும் டிலைட் திட்டத்திற்கு தனதுபங்களிப்பாக பத்தாயிரம்ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்தார்.முனைவர் ஜீவிஎஸ்தர், நிதிக்காப்பாளர் முனைவர் குளோரியம் அருள்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் அந்தோணிசெல்வகுமார் நன்றிகூறினார்.முனைவர்.பியூலா ஹேமலதா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள்,மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.விழாவிற்கானஏற்பாடுகளை கல்லூhp செயலாளர் எஸ்.டி.கே.ராஜன் ஆலோசனையின்படி கல்லூரிமுதல்வர் அருள்ராஜ் பொன்னு துரை, பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here