கோவில்பட்டி பஸ் நிலையத்தில் பரிதவித்த பயணிகள் – உதவிக்கரம் நீட்டிய காவல்துறையினர்

0
104
kovilpatti police news

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க் கிழமை மாலை முதல் வரும் 31ந்தேதி வரை 144 தடை உத்தரவினை தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதன் காரணமாக கோவில்பட்டியில் செவ்வாய் கிழமை மாலை அனைத்து வணிக நிறுவனங்கள், தீப்பெட்டி ஆலைகள் என அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஆட்டோ, வேன், கார் என எவ்வித வாகனமும் இயங்கவில்லை,

இதற்கிடையில் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், பஸ் நிலையத்தில் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இதனை தொடர்ந்து கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ் மேற்பார்வையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பன் மற்றும் போலீசார் ஆகியோர் அரசு மற்றும் தனியார் மினி பஸ்கள், வேன்கள் ஏற்பாடு செய்து மதுரை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகளை அனுப்பி வைத்தனர்.

மேலும் இரவு வரை காவல்துறையினர் பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பயணிகளையும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பும் பணியை மேற்கொண்டனர்.காவல்துறையினர் நடவடிக்கையினால் பயணிகள் நிம்மதி பெரூமூச்சு விட்டது மட்டுமின்றி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து கொண்டனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்ட எல்லை ஆரம்பிக்கும் தோட்டிலோவன்பட்டி விலக்கு அருகே கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here